தடுப்புமுகாம்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. இது விடயத்தில் சிறிலங்கா அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று சிறிலங்கா சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு, சிறிலங்கா அரசு தனது புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 6 மில்லியன் யூரோவை வழங்குவதாக உறுதியளித்திருக்கிறது.
சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியக்குழுவில் ஒருவரான ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருந்தி மற்றும் மனிதாபிமான உதவித்துறை அமைச்சர் கரல் தெரிவிக்கையில் -
தடுப்புமுகாம்களில் உள்ள மக்களது பாதுகாப்பு மிக முக்கியமானது. விசேடமாக பெண்கள், தமது வீட்டுக்கு தனியாக திரும்பும் பெண்கள், வயோதிபர்கள், ஊனமுற்றவர்கள் ஆகியவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
போருக்கு பின்னர் சிறிலங்கா அரசு சரியாக பாதையில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தடுப்புமுகாம்களில் உள்ள மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் சரியாக வழிமுறைகளை அரசு பின்பற்றவேண்டும். தடுப்புமுகாம்களுக்கு அரச சார்பற்ற அமைப்புக்களை அனுமதித்தால் உதவி வழங்கும் நாடுகள் அந்த அமைப்புக்களுக்கு ஊடாகவும் மக்களுக்கு உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளன - என்றார்.
சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் தொடர்பாக தெரிவிக்கையில் -
சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் யாருக்கும் ஆதரவு வழங்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் நடுநிலை வகிக்கும் ஒரு அமைப்பாகும். சிறிலங்காவின் உள்நாட்டு அரசியல் விடயத்தில் தலையிடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் சிறிலங்கா தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டில் விசேட மாற்றம் எதுவும் ஏற்படாது - என்று கூறினார்.
நன்றி: ஈழநேஷன்

0 Responses to தடுப்புமுகாமில் உள்ள பெண்கள் பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கரிசனை