Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனோ கணேசன் எம்.பி. ஆவேசம்

யுத்தம் முற்றாக முடிவுற்றுள்ளதால் வடக்கு, கிழக்கிலுள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு அவை அடியோடு இல்லா தொழிக்கச் செய்யப்பட வேண்டும் என மனோ கணேசன் எம்.பி. அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் அங்கு தெரிவித்தவை வருமாறு:
மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல் மோசடிமிக்க ஆட்சியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டை மீட்டெடுக்கும் முதற்கட்ட நடவடிக்கையின் போது தமிழர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டன. பொன்சேகாவை ஜனாதிபதியாக்கும் ஒரே தீர்மானத்தில் இன்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் உள்ளனர். தெற்கு மக்களை விட வடக்கு கிழக்கு மக்களே அதிகளவில் பொன்சேகாவுக்கு வாக்களிப்பர். இத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல கோரிக்கைகளை முன்வைத்து இரு வேட்பாளர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றது. அக்கட்சி முன்வைக்கும் அத்தனை கேள்விகளுக்கும் மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்க வேண்டும்.

யுத்தம் முடிந்த பிறகு கைதுசெய்யப் பட்டுள்ளவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு நாம் அரசிடம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டு வருகின்றோம். கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அந்த விவரங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைக்கும் கோரிக்கைகளுள் ஒன்றுதான் வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட வேண்டும் என்பது.
பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப் பட்டது புலிகளின் பீரங்கித் தாக்குதலில் இருந்து இராணுவ முகாம்களைப் பாதுகாப் பதற்காக. இப்போது புலிகள் இல்லை. அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்கான தேவை எதுவும் இல்லை.

ஆகவே, கட்டம்கட்டமாக இப் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அப்பகுதிகளில் மக்கள் குடியேற வழியமைத்துக் கொடுக்க வேண்டும். அரசே இதைச் செய்ய வேண்டும்.இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் ஒன்றி ணைந்து மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து பொன்சேகாவின் தலைமையில் நல்லதோர் ஆட்சியை உருவாக்க முன்வர வேண்டும். என்றார்.

0 Responses to யுத்தம் முடிவடைந்த பின்னரும் பாதுகாப்பு வலயங்கள் எதற்கு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com