யுத்த வெற்றிக்கு உரிமை கோரிப் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் கடும் சவாலை எதிர்கொள்வதாலும், அரச கட்டமைப்புகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள் ளமையாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், வன்முறை மிகுந்ததாகவும் அமைதியற்றதாகவும் அமையலாமென "சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான ஜனநாயக செயற் பாடு" ("டவ்ரல்") எனும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த பல வருடங்களாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிப்பதற்கான உரிமை வழங்கப்படாததையும் சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு, தேவையற்ற தலையீடு கள் இன்றி சுதந்திரமாக இந்த மக்கள் வாக் களிப்பதற்கான அனைத்து வசதிகளும் வழங் கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறுகின்றதா என்பதை
சுயாதீனமாகக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தென்மாகாணம் குறித்து விசேட கவனத்தைச் செலுத்தவுள்ளோம்.
தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளினது வேட்பாளர்களும் நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கப் போகிறார்கள் எனக் குறிப்பிட்டு அதற்கான யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
இது, முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயம்தான்.
முப்பது வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த சரத் பொன்சேகாவும் யுத்த வெற்றிக்குத் தாமே காரணம் என்ற கோஷத்தை முன்வைத்துப் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக இந்தத் தேர்தல் இருவருக்குமே சவாலாக அமையப் போகின்றது.
இந்தக் காரணத்தினால் இத் தேர்தல் வன்முறை மிகுந்ததாகவும், அமைதியான முறையில் இடம்பெறாததாகவும் அமையப் போகின்றது. இதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படுகின்றன.
தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் வாக்களிப்பதற்குப் பலருக்கும் உள்ள உரிமை பறிபோகப் போகின்றது.சுயாதீன அமைப்பென்ற வகையில் தேர்தல் ஆணையாளரின் விசேட கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டுவரப் போகின்றோம்.நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நல்லாட்சியை உறுதிசெய்யும் நோக்குடனேயே அரசமைப்பின் 17 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.எனினும், இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக அரச கட்டமைப்புகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.தேர்தலும், ஊடகங்களும் துஷ்பிரயோகத்திற்குள்ளாகலாம். இதனால் ஜனநாயகத் தேர்தல் குறித்த நம்பிக்கைகள் குறைவடைந்துள்ளன.இந்த நிலைமையைச் சரிசெய்வதற்காக மக்களின் விழிப்புணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்.இதுவரை நடைபெற்று முடிந்த சகல தேர்தல்களிலும் அரச ஊடகங்களும் பொதுச் சொத்துகளும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன.இதுபற்றிக் கவனம் செலுத்தவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தேர்தலில் வன்முறை மிக மோசமாக வெடிக்கலாம் "டவ்ரல்" கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கிறது