Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் புதிய பரிமாணத்தில் எழுச்சிய பெற ஆரம்பித்துள்ளன. அவற்றை தலை தூக்க விடாமல் அழித்தொழிப்பதற்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்லும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாத்தளை புனித தோமையார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் பேசுகையிலேயெ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு கூறுகையில் -

போரின்போது மீட்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடியகற்றல், கிளைமோர் குண்டுகளை செயலிழக்கச்செய்தல், மக்கள் மீள்குடியேற்றம் ஆகிய நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டுவருகிறார்கள். இவற்றுடன் மக்களின் நம்பிக்கையை வெல்லும்வகையில் காரியங்களை முன்னெடுப்பதும் மிகத்தேவையான விடயமாக உள்ளது.

இந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் ஊடாகவே போர்வெற்றியின் உண்மையான பெறுபேற்றை அனுபவிக்கக்கூடிய யாதார்த்த நிலையை நோக்கி நாம் பயணிக்க முடியும். அதன் முன்னேற்றகராமான படிநிலையின் வழியில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பாதையையும் - சமாந்தரமாக - சீர்படுத்தமுடியும்.

கடந்த நான்கு வருட போரில் சுமார் 6 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். அவர்களின் தியாகம் வீண்போகாமல் நாட்டை சரியான பாதையில் வழிநடத்தவேண்டும் - என்றார்.

0 Responses to புதியவழியில் எழுச்சிபெற ஆரம்பித்துள்ள புலிகளை அழித்தொழிக்கவேண்டும்: சீறுகிறார் கோத்தபாய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com