Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று யுத்தம் முடிவுற்று குருதி உறையும் முன்னரே ஒரு ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கின்றோம் என யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,

தற்போது ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளவருமான டாக்டர் .எம். இல்லியாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து மேலும் தெரிவித் தவை வருமாறு:

ஆறு வருடத்துக்கு முன்னர் முதிர்ச்சி பெறாத இந்தத் தேர்தல் சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை ஒரு திருப்பு முனையாக அமையப்போகிறது. இத் தேர் தலில் போட்டியிடும் வேட்பாளர் எவரும் முறையான தீர்வு எதனையும் வைக்காத நிலையில் நாம் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம்.

சிறுபான்மை மக்களின் வாக்கு சக்தி மிக்கதாக பேரம் பேசக் கூடியதாக இருக்க வேண்டுமானால் நாம் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். முதல் வாக்கை நாம் அவருக்கு அளிக்கும் பட்சத்தில் எவரும் 50 வீத வாக்குகளைப் பெறாமல் இரண்டாம் சுற்றுக்கு தள்ளப்படுவார்கள். யார் சிறுபான்மை மக்களுக்கு அதிகபட்ச உரிமைகளை வழங்குகிறார்களோ அவர்களுக்கு எமது இரண்டாவது வாக்கை கடைசி நேரத்தில் அளிக்க முடியும்.

ஏனைய நாடுகளில் சிறுபான்மை மக்கள் இந்த முறையைப் பின்பற்றியே ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து வருகிறார்கள். இதனடிப்படையிலேயே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளேன். எனவே, தமிழ் முஸ்லிம் மக்கள் சிந்தித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் நான் வேட்பாளர் பட்டியலில் இருந்து வாபஸ் பெறவும் தயாராக இருக்கிறேன். எனவே, தமிழ் முஸ்லிம் தலைவர்களும் மக்களும் இவ்விடயத்தில் சிந்தித்துச் செயற்படுவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்றுள்ளது.

0 Responses to ஜனாதிபதித் தேர்தல் களத்தில் தமிழ் பேசும் சுயேச்சை வேட்பாளர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com