Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் பெண்கள் ஒருவேளை உணவுக்காகக் கூட தம்மை படையினருக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர் என ஆங்கில பத்திரிகை ஒன்றில் பணத்துக்காய் சோரம் போய் செவ்வி அளித்திருக்கிறார், லண்டனில் வசிக்கும் வாணி ஞானகுமார் என பல வாசகர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி லண்டன் வந்த பின்னர் வாணி அவர்கள் சில ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு மட்டும் நேர்கணல்களை வழங்கியிருந்தார். பல தமிழ் ஊடகங்கள் அவரை அனுகியபோது அதைத் தவிர்த்துக் கொண்ட வாணி அவர்கள், தாம் தமிழ் ஊடகங்களில் நேர்காணல் கொடுக்க விரும்பவில்லை என தட்டிக் கழித்தார்.

திடீரென அனைத்து நேர்காணல்களையும் நிறுத்திய வாணி அவர்கள் தமது உறவினர்கள் முகாமில் இருப்பதாகவும், அவர்களுக்கு இலங்கை இராணுவத்தால் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியிருந்தார். தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதால் தான் திரும்பவும் நேர்காணல்களை வழங்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் இவர் தமிழ் பெண்கள் குறித்து கூறியுள்ள கருத்துக்கள் பல வாசகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதுடன், பல திருமணம் முடிக்காத பெண்களின் வாழ்க்கையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இவர் பல பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார் என்ற கருத்து தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. இதுவரை சிங்கள ஊடகங்களில் கூடத் தமிழ் பெண்களை பற்றி இவ்வாறான செய்திகள் எதுவுமே வெளியிடப்படவில்லை என ஒரு வாசகர் சுட்டிக்காட்டுகிறார்.


இது ஒருபுறம் இருக்க தமிழ் பெண்கள் ஒரு நேர சாப்பாட்டுக்காக தங்களை இராணுவத்தினரிடம் அர்ப்பணித்தார்கள் என்பதை நாம் ஒரு காலமும் நம்ப முடியாது. தமிழ் பெண்களின் கற்பு என்பது உடலில் இல்லை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும், அது மனதில் இருக்கிறது என அதிர்வு இணையம் தெரிவிக்க விரும்புகிறது. உடலை ஒருவன் பலாத்காரம் செய்யலாம், ஆனால் மனதை அப்படிச் செய்ய முடியாது. எனவே வாணி அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் ஏற்க்கக்கூடியதாக இல்லை. இவர் இவ்வாறு கூறியிருப்பது குறித்து வாசகர்களின் கருத்துக்களை அறிய நாம் முற்படுகின்றோம், வாணி கூறிய கருத்துக்கள் சரியானவையா, இல்லை இவர் வேறு வார்த்தைகளைப் பாவித்து இருக்கலாமா?

இவர் பரபரப்புக்காக அல்லது பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காக இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுகிறாரா? வாசகர்களாகிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்: athirvu@gmail.com

அதிர்வு இணையத்தில் வெளியான செய்தி
நன்றி: அதிர்வு

3 Responses to தமிழ்பெண்களை மானபங்கப்படுத்துகிறாரா சர்ச்சைக்குரிய வாணி

  1. தமிழ் பெண்கள் ஒரு நேர சாப்பாட்டுக்காக தங்களை இராணுவத்தினரிடம் அர்ப்பணித்தார்கள் என்பதை நாம் ஒரு காலமும் நம்ப முடியாது. தமிழ் பெண்களின் கற்பு என்பது உடலில் இல்லை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும், அது மனதில் இருக்கிறது என அதிர்வு இணையம் தெரிவிக்க விரும்புகிறது. உடலை ஒருவன் பலாத்காரம் செய்யலாம், ஆனால் மனதை அப்படிச் செய்ய முடியாது. //

    இதுதான் சரியானது... வாணியின் கருத்தில் உள்னோக்கம் இருப்பதாய் தெரியவில்லை...

     
  2. அன்புள்ள சகோதரி, எங்கள் பெண்கள் கண்ணகி பரம்பரையில் வந்தவர்கள். உயிரை விடினும் மானத்தை காப்பவர்கள். நீங்கள், நாகரீக மோகத்தினால், கற்பிழந்து, கரை சேர்நசதிருக்கலாம். ஆனால், எங்கள் தமிழச்சிகள், உணவுக்காக கற்பை இழப்பவர்கள் அல்ல......., தமிழரை இழிவுபடுத்தும் நீயும் ஓரு தமிழச்சி வயிற்றில் பிறந்தவளா?

     
  3. mayuraa Says:
  4. wel said jessie

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com