மிகப்பெரும் வேதனையுடன் உலகப்பந்தெங்கும் தமிழீழம் எனும் தணியாத தாகத்துடன் போரடிக்கொண்டிருக்கும் மக்களின் மனதில் விஜய் எனும் தமிழ்த்திரையுலக நடிகருக்கு ஓர் இடம் இருந்ததென்றால் மறுப்பதற்கில்லை. ஆனால் பால் குடிக்கும் பிள்ளைகூட விஜய்யை நினைப்பதற்கு முன் எமது தலைவருக்கு வணக்கம் சொல்லி மாவீரர்களை வணங்கித்தான் நடிகர் விஜய்யான உம்மை நேரம் கிடைத்தால் சிந்திக்குமென்பதை நீர் உணரவேண்டும், என ஐரோப்பிய இளையோர் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அன்புக்குரிய தமிழ் உறவுகளே,
சிங்கள இனவெறியர்களின் இரத்தக்கறைபடிந்த வரலாறு தெரியாமல் ஆயுதங்களை கைவிட்டு போராட்டத்தை மறந்து நட்புவலை வீசும்படி, உண்மையிலேயே இலங்கை அரசியல் வரலாறு தெரியாமல் வடிவேலு கூறுவதுபோல் சின்னப்பிள்ளைத்தனமாக பாடலுக்கு பொருளமைத்துள்ளனர்.
சற்று எண்ணிப்பாருங்கள்.
நாம் கைகோர்கும் விதத்திலா சிங்களம் உள்ளது. பட்டப்பகலில் மக்கள் மத்தியில் தமிழனை அடித்துக்கொல்லும் போது தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்த்து நின்றவர்கள் தான் சிங்களவர்கள். இதுமட்டுமா, நாம் அமைதி வழியில் போராட்டம் நடத்தியபோதெல்லாம் கொடுர ஆயுத வன்முறை திணிக்கப்பட்டுபோது தான் நாம் ஆயுதம் ஏந்தினோம். அதை தற்பொழுது மௌனித்துள்ளோம்.
சர்வதேசம் சரியான தீர்வு வழங்கவில்லையென்றால் மீண்டும் அவ்வாயுதங்களை கைகளில் ஏந்துவோம். ஏனெனில் 21 ஆம் நூற்றாண்டின் இனவழிப்பு வேட்டையாடும் கொடிய சிங்களவர்களிடமிருந்து எம்மைக் காக்க எமக்கு வேறு வழியில்லை. நாம் நிறுத்தவேண்டுமென்றால் நீங்கள் நிறுத்துங்கள். எம்மினத்துக்கான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
மிகப்பெரும் வேதனையுடன் உலகப்பந்தெங்கும் தமிழீழம் எனும் தணியாத தாகத்துடன் போரடிக்கொண்டிருக்கும் மக்களின் மனதில் விஜய் எனும் தமிழ்த்திரையுலக நடிகருக்கு ஓர் இடம் இருந்ததென்றால் மறுப்பதற்கில்லை. ஆனால் பால் குடிக்கும் பிள்ளைகூட விஜய்யை நினைப்பதற்கு முன் எமது தலைவருக்கு வணக்கம் சொல்லி மாவீரர்களை வணங்கித்தான் நடிகர் விஜய்யான உம்மை நேரம் கிடைத்தால் சிந்திக்குமென்பதை நீர் உணரவேண்டும்.
இப்படித்தான் எமது தலைவர் எமது தமிழ்த்தேசியத்தை சர்வதேசமயமாக்கியுள்ளார். உம்முடைய புதிய கூட்டணி உம்மை நேசித்த அனைத்து மக்களின் மனங்களையும் சீற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. இதற்குப்பதிலாக ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய இனத்திடமும் நடிகர் விஜய் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். அத்துடன் வேண்டாத தமிழினவழிப்புக் கும்பலுடனான தொடர்புகளை துண்டிக்கவேண்டும்.
இவை நடைபெறாத பட்சத்தில் வேட்டைக்காரன் கூட்டணிக்கெதிரான புறக்கணிப்புப் போராட்டம் தமிழ் இளையோர்களால் அனைத்துக் கிளைகளையும் ஒன்றிணைத்து சர்வதேசஅளவில் தீவிரப்படுத்தப்படும் என்பதனை அறியத்தருகிறோம்.
ஐரோப்பிய இளையோர் பேரவை
செல்வக்குமரன்
ஒருங்கிணைப்பாளர்
(ஐரோப்பிய இளையேர் பேரவை)

0 Responses to ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய இனத்திடமும் நடிகர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்: ஐரோப்பிய இளையோர் பேரவை