Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்த ராஜபக்ஷ அரைநிர்வாணத்துடன் விசேட பூஜையொன்றை நடத்தி, வேட்பு மனுவில் கையெழுத்திட்டதால், வேட்பு மனுக் கையெழுத்திடும் காட்சியை எவரும் படம்பிடிக்க அனுமதிக்கப்படவில்லையாம். இதனால் அவர் வேட்பு மனுவில் கையெழுத்திடும் படங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லையென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைவர் ஒருவர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் வெளியிட்டமை குறித்த புகைப்படங்களை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு வழங்கியிருந்தது. எனினும், வேட்பு மனுவில் கையெழுத்திடும் படம் ஏன் வெளியிடப்படவில்லையெனக் கேட்டபோதே அந்த அதிகாரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிடைத்துள்ள தகவல்களின்படி குறித்த பூஜையை நாடாளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருநடேசனே ஏற்பாடு செய்துள்ளார். சோதிடத்தில் கடும் நம்பிக்கைக் கொண்டு செயற்பட்டுவரும் ஜனாதிபதி அரைநிர்வாணத்துடன் கையெழுத்திட்ட வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளரின் பின்புறமாகச் சென்று வடக்கு திசையைப் பார்த்தவாறே வழங்கியிருந்தார்.

அதேவேளை, சோதிடர்களின் ஆலோசனைகளின்படி தற்போது பகிரங்கக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லையெனவும் ஜனாதிபதித் தீர்மானித்துள்ளார். நல்லவேளை சோதிடர் அரை நிர்வாணம் என்று கூறியுள்ளார், முழு நிர்வாணம் என்றாலும் ஆட்சிக்கா அப்படிச் செய்திருப்பார் மகிந்த.

நன்றி: அதிர்வு

0 Responses to அரைநிர்வாணத்துடனேயே ஜனாதிபதி வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com