வன்னிப் பெருநிலப்பரப்பில் புலிகள் கண்ணிவெடிகளை வினோதமான முறையில் புதைத்திருக்கிறார்கள் எனறு கண்ணிவெடி அகற்றும் சுவிஸ் நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழமையாக கண்ணிவெடிகளைப் புதைக்க ஒரு வியூகம் இருப்பதாகவும், ஆனால் அதனைப் பின்பற்றாமல் புலிகள் வினோதமான முறையிலும் கண்ணிவெடிகள் எங்கு இருக்கலாம் என்று சற்றும் ஊகிக்க முடியாத இடத்திலும் கண்ணிவெடிகளைப் புதைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுவிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் வன்னியில் பெரியதம்பனை முதல் பண்டிவிரிச்சான் வரை கண்ணிவெடிகளை தாம் அகற்றி இருப்பதாக அறிவித்துள்ளதாக அதிர்வின் நிருபர் தெரிவித்தார்.
குரோவேசியா தயாரிப்பான தானியங்கி இயந்திரத்தைக் கொண்டு, கண்ணிவெடிகளை முன் நாள் இந்தியப் படையதிகாரி ஒருவர் அகற்றிவருகிறார். இவர் சுவிஸ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் மேலும் தெரிவிக்கையில் புலிகள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள்ளும் , கவச வாகனங்களைத் தாக்கியழிக்கும் கண்ணிவெடிகளை புதைத்திருப்பதாத் தெரிவித்தார். வடகிழக்கில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இராணுவத்தினர் புதைத்த கண்ணிவெடிகளும் உள்ளடங்கும்.
இதுவரை சுமார் 4,589 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதாகக் கூறுகிறார் இந்திய ராணுவ அதிகாரி. இருப்பினும் இந்த முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியின் கூற்றுப்படி , இதன் காரணமாக கண்ணிவெடிகளை அகற்ற காலதாமதம் ஆகும் என்ற கருத்தையும் அவர் திணிக்க முற்படுவதாகவே தோன்றுகின்றது. எனவே மக்களை மீள்குடியேற்ற அரசு தாமதிப்பதை, இவர் நியாயப்படுத்த பார்ப்பது போன்ற தோற்றப்பாடே வெளிப்படுகிறது.
நன்றி: அதிர்வு

0 Responses to புலிகள் கண்ணிவெடிகளை வினோதமான முறையில் புதைத்திருக்கிறார்கள்?