இவ் வைபவத்தில் மனித உரிமைகள் நாள் பாதுகாவலர் திரு.சின்னையா இந்திரன் திரு.அனா அவர்களும் தமிழர்கள் சார்பாக கலந்து கொண்டார்கள்.
9ம் திகதி நடந்த கருத்துப்பட்டறையில் திரு.இந்திரனும் திரு.அனா அவர்களும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடக்கும் அட்டுழியங்களை வருகை தந்திருந்த 42 அமைப்புக்களுக்கும் எடுத்து விளக்கியதோடு கடைசியாக நடந்த சம்பவங்களை இறுவட்டு மூலமாக காண்பித்தார்.
சனல் 4 ல் வந்த இறுவட்டை காண்பித்த போது பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். பட்டறை நிறைவில் தமிழர்கள் சார்பாக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1). இலங்கை அரசுக்கு நெதர்லாந்து அரசு தமிழ் மக்களை அவர்கள் சொந்த இடங்களில் மீளகுடியேற்றுவதோடு சகலவசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
2). தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நெதர்லாந்து அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.
3). போர் குற்றவாளிகளை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தவேண்டும்.
மேற்படி தீர்மானிக்கப் பட்ட பரிந்துரைகளை 10ந் திகதி சமாதான சதுக்கத்தில் இருந்து ஊர்வலமாக பாராளு மன்றத்துக்கு சென்றுகையளித்தனர்.
எல்லா அமைப்புக்களும் தொடர்ந்து தமிழ்மக்களின் பிரச்சனையில் தம்மால் முடிந்த வரை ஒத்துழைப்பு வழங்குவதாக
உறுதியளித்தனர்.



0 Responses to நெதர்லாந்தில் நடைபெற்ற மனித உரிமைகள் நாள் நிகழ்வு