Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.மாவட்டத்தில் நகர்ப்பகுதிகளில் இராணுவத்தின் காவலரண்கள் நாளுக்கு நாள் அகற்றப்பட்டு வரும் அதே நேரத்தில் புதுப்புது காவலரண்கள் கிராமப்புறத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி அமைக்கப் பட்டிருந்த சோதனைச் சாவடிகள் அகற் றப்படுவதுடன் படையினரால் கடைப் பிடிக்கப்பட்டு வந்த சோதனை நடவடிக் கைகளும் தளர்த்தப்பட்டு, வீதித்தடைக ளும் அகற்றப்படுகின்றன. சில இடங்களில் காவலரண்கள் அகற்றப்பட்டும் சில பின் னகர்த்தப்பட்டும் வந்தன. இது குறித்து மகிழ்ச்சியடைந்த மக்கள் அச்சமின்றி நட மாடி வருகின்றார்கள்.

இந்த நிலையில் அகற்றப்பட்ட காவ லரண்களுக்குப் பதிலாக புதிய காவலரண் கள் நாளுக்கு நாள் அமைக்கப்பட்டு வருகின்றன. தாவடி, மானிப்பாய் வீதியில் தாவடித்தோட்ட வெளியிலுள்ள அரிசியாலை இயங்கிவந்த கட்டடத்தில் இராணுவக் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சுதுமலை-இணுவில் வீதியில் பாலாவாடை என்ற இடத்தில் முடியழகு நிலையத்தில் இயங்கிவந்த கட்டடத்திலும் இராணுவக் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுவரும் புதிய காவலரண்களினால் அச்சமின்றி நடமாடிய மக்களுக்கு ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது.

0 Responses to யாழ் நகரில் அகற்றப்படும் காவலரண்கள் கிராமங்களை நோக்கி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com