ஈழத்தமிழினத்தால் நன்றியுடனும் உணர்வுடனும் உள்ளத்து ஆழத்திலிருந்து நினைக்கப்படவேண்டியவர்.அவரைப் புரிந்துகொள்ளவேண்டுமானால்,தேசியத்தலைவரின் முழுமையை தரிசிக்க வேண்டுமானால் அதற்கு உரிய குறைந்தபட்ச தகுதி அல்லது தேவை என்னவென்றால் விடுதலையின் தேவையையும் சுதந்திரத்தின் அருமையையும் உணர்ந்துகொள்ளக் கூடிய ஒருவராக இருந்தால்மட்டுமே.மானுடவிடுதலையை யாசிக்கும் எவனும் அவரின் வரலாற்றை நேர்மையாகவும் உண்மையாகவும் புரிந்துகொள்ளமுடியும். மனிதனுக்கும் விலங்குகளுக்குமான பெரியவித்தியாசமே சுதந்திரத்தை உணர்ந்துகொள்ளுவதும் உணராததும் ஆகும்.சுதந்திரம் என்ற உன்னதத்தை வேண்டிநிற்கும் கோடானுகோடி மக்களுக்கு தேசியதலைவரின் வரலாறு ஒரு யாகம்!ஒரு வழிகாட்டி!!எல்லாவற்றிலும்மேலாக அவரின் வரலாறு தோழமைநிரம்பிய ஒரு அரவணைப்பு!!!
தேசியதலைவரைப்பற்றி ஒரு வாரசஞ்சிகையிலோ வாரப்பத்திரிகையிலோ எழுதமுனையும் ஒருவனுக்கு நிறைய சங்கடங்களை அவரின் வரலாறு ஏற்படுத்தும்.ஏனென்றால் அவரின் வரலாறானது ஒன்றிரண்டு பக்கங்களுள் அடக்கி சுருக்கி எழுதப்படக்கூடிய ஒன்றுஅல்ல.அவரின் வாழ்வு என்பது தனிப்பட்டஒரு பிரபாகரனின் வாழ்வுஅல்ல.அது ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் போராட்டவரலாறு.எந்தவொரு முக்காடுகளுமின்றி இயல்பாகவே விடுதலைஎன்ற ஒப்பற்றவாழ்வியலை தனதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க போராடிய அவரின் வாழ்வுமுழுவதுமே வீரமும்,அர்ப்பணிப்பும்,ஒழுக்கமும்,ஓர்மமும், தோழமையும்,தியாகமும்,அற்புதங்களும் நிறைந்தே காணப்படுகின்றன.இப்போதும் இனி எப்போதுமே அந்த வரலாறுதான் ஈழத்தமிழினத்தை நேரெடுக்கும்.அந்த வரலாற்றை படிப்போம்.திரும்பதிரும்ப படிப்போம்.அதிலிருந்து கற்போம்.அதையே கற்போம்.மற்றவர்க்கும் சொல்வோம்.தொடங்குகிறோம்……
இது நடந்தது.1983ன் ஆரம்பத்தில்.1982ன் இறுதியில் விடுதலைப்புலிகளின் போராட்டம் சிறீலங்காஇனவெறி அரசால் நிராகரிக்கமுடியாத அளவுக்கு வேகம் கொண்டிருந்தது.நெல்லியடி சந்தியில் சிறீலங்காகாவல்துறையின் வாகனத்தின் மீதான அதிரடித்தாக்குதல் மக்கள்செறிந்த ஒரு முன்னிரவுப்பொழுதில் நடாத்தப் பட்டதால் அதிர்ச்சிகொண்டிருந்த சிங்களத்துக்கு அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பொன்னாலை பாலத்தில் கடற்படைமீதான கண்ணிவெடித் தாக்குதல்,சாவகச்சேரிகாவல் நிலையம்மீதான வீரமிகுவெற்றிகரமான தாக்குதல், உமையாள்புரத்தில் இராணுவதொடரணி மீதான தாக்குதல் என்பனவற்றால் செய்வதுஅறியாது பேரினஅரசு நின்றது.தமிழீழத்தின் வடபகுதியில் சிறீலங்கா அரசின் ஆதிக்கப்பிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்துவருவதை ஆட்சியாளர்கள் அதிர்ச்சியுடன் விளங்கிக்கொண்டனர். தமிழ்மக்களின் மீதான ஒடுக்குமுறை நிர்வாகம் தோல்விகொண்டுவருவதை தெரிந்து கொண்டனர்.தமிழ்நிலத்தின் மீதான நிர்வாகத்தை பலமாகஇறுக்கமாக்குவதன் மூலமே தமிழ்தேசியஇனத்தை நீண்ட காலத்துக்கு அடிமைகளாய் வைத்திருக்கலாம். அதற்கு ஏதாவதுசெய்தே தீர வேண்டியதேவை சிங்களத்துக்கு 1982ன் இறுதியிலும் 1983ன் தொடக்கத்திலும் ஏற்பட்டது.
1983ன் தொடக்கத்தில் உலகத்துக்கும் தென்னிலங்கைக்கும் தமிழ்ப்பகுதிகளில் இன்னமும் சிங்களநிர்வாகமே தொடர்வதாக காட்டவேண்டிய காரணத்துக்கான முதல்கட்டமாக யாழ்மாவட்டத்தில் உள்ள மாநகரசபை மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலை அறிவித்தது.யாழ்மாவட்டத்தில் சாவகச்சேரி, பருத்தித்துறை,வல்வெட்டித்துறை என்பன மட்டுமே நகரசபைகள்.யாழ்ப்பாணநகரம் மாநகரசபை ஆகும்.ஆக இந்த நான்குஇடங்களிலும் இருந்த நகர,மாநகர சபைகளுக்கான தேர்தலை அறிவித்தது.அதற்கு முந்திய பத்துமாதங்களாக விடுதலைப்புலிகள் காவல்துறைமீதும் இராணும்,கடற்மீதும் நடாத்திய தாக்குதல் களால் பெரும்அச்சம் கொண்டிருந்த சிங்களஅரச இயந்திரத்துக்கு சிறீலங்காவின்
தேர்தல்அறிவிப்பு ஒரு ஊக்கமருந்தாக கொடுக்கப்பட்டது.மறுபுறத்தில் தமிழீழ மக்கள்மீது ஒரு சவாலாகவும் சிங்களம் இதை செய்தது.அரசியல்ரீதியான இந்த சவாலை மட்டுமல்லாமல் இராணுவரீதியாகவும் விடுதலைப் புலிகளுக்கு சவால் விடும்வகையில் குருநகர்இராணுவமுகாமில் லெப்.கேணல் சரத்முனசிங்கா தலைமையில் ஒரு பாரியநுணுக்கமான புலனாய்வுமையத்தை சிங்கள ஆட்சியாளர் கள் நிறுவினார்கள்.1983 மே 18ம் திகதி நடக்க இருந்த மாநகர,நகர சபைகளுக்கான தேர்தலை ஒழுங்காக நடாத்தும் பொறுப்பு இந்த புலனாய்வு மையத்திடம் மறைமுகமாக ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் வரலாற்றுமுக்கியத்துவமான ஒரு முடிவை தேசியத்தலைவர் எடுத்தார்.சிங்களஅரசு தேர்தலைஅறிவித்த ஓரிரண்டு நாட்களுக்குள் தலைவர் அந்தமுடிவை இயக்கத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் அறிவித்தார்.அந்தநேரத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த உறுப்பினர்களின் மொத்ததொகையே முப்பதுக்கும் குறைவானதே.மிகக் குறைவான உறுப்பினர்களை வைத்துக்கொண்டும்,மிகமிக வலுக்குறைந்த ஆயுதங்களுடனும், மக்கள்மத்தியிலான பகிரங்கமான தொடர்புசாதனங்களான பத்திரிகை போன்ற எதுவுமே அற்ற நிலையிலும் ஒரு பலமான அரசாங்கத்தின் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்த தலைவரின் தீர்க்கமும் துணிவும் இன்றுவரை வியப்புக்குரியதாக இருக்கிறது.தலைவருக்கு அடுத்தநிலையில் இருந்த மூத்தவர்கள் ‘தேர்தலைப் புறக்கணிக்கும்’ முடிவை சாத்தியமற்ற ஒன்று என்றே நினைத்தார்கள்.தலைவருக்கும் சொன்னார்கள்.மிகவும் சொற்பமான பொது மக்களே விடுதலைப்புலிகளை அறிந்தும் தெரிந்தும் வைத்திருந்த அன்றைய நிலையில் என்னவிதத்தில் மக்களை அணுகமுடியும் என்று மூத்தஉறுப்பினர்
ஒரு சிலர் தலைவருக்கு சொன்னார்கள்.
இந்த நேரத்தில் தலைவரின் முடிவுஎடுக்கும் ஆற்றல் பற்றி கொஞ்சம் சொல்லலாம்.தலைவர் எப்போதுமெ திடீர் என முடிவுகளை எடுக்கமாட்டார்.அவர் தமிழீழ மக்களின் விடுதலைக்காக சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் செயற்பட்டதால் அவரால் தினமும் சிங்களத்திலும் தமிழீழத்திலும் ஏற்படும் மாற்றங்கள் உணர்வுரீதியாக உள்வாங்கப்பட்டுவந்தன.அந்த உள்ளுணர்வு என்பது அசாத்தியமானது.அற்புதமானது.அவருடைய செயல் சிந்தனை எல்லாமே விடுதலை நோக்கியே இருந்ததால் அவரால் முடிவுகளை இயல்பானமுறையிலேயே எடுக்க முடிந்தது.முடிவு எடுத்த நிமிடத்தில் இருந்து அதனை செயற்படுத்த அவர் வேலைசெய்யத் தொடங்கிவிடுவார்.
1983 மே 18 நடைபெறஇருந்த தேர்தல் சம்பந்தமான தன்னுடைய முடிவை தலைவர் அழுத்தம் திருத்தமாக எல்லா உறுப்பினர்களுக்கும் சொன்னார். ‘இந்த தேர்தலை எமது மக்கள் புறக்கணிக்கவேண்டும்.அதற்காக இன்றிலிருந்து விடுதலைப்புலி உறுப்பினர் ஒவ்வொருவரும் முழுதாக வேலைசெய்யவேண்டும். நாங்கள் எமது மக்களிடம் போவோம்.தேர்தலில் வாக்களிக்கவேண்டாம் என்று சொல்லுவோம்’ என்று தலைவர் சொன்னாலும் இன்னும் மிகக்குறைவான நாட்களில் இதனை எப்படி செயற்படுத்துவது என்பது பல உறுப்பினர்களுக்கு சந்தேகம் இருந்தது என்னவோ உண்மைதான்.ஆனாலும் தலைவரின் திட்டமிடல் என்பது மிகவும் வீச்சானது என்பதை அடுத்த நாட்களில் எல்லோரும் தெரிந்து கொண்டனர்.
மே18 தேர்தலுக்கு சிலவாரங்களே இருந்தபோது தலைவர் முதன்முதலாக ஒரு அறிக்கை விடுகிறார்.அந்தநேரத்தில் தலைவரின் அறிக்கையை வெளியிட எந்தஒரு ஊடகமும் விடுதலைப்புலிகளிடம் இருந்திருக்கவில்லை. அந்தக்காலப்பகுதியில் தலைவரின் அறிக்கையோ அல்லது தாக்குதல் உரிமை கோரும் அறிவிப்போ எதுஆனாலும் அப்போது இருந்த உறுப்பினர்களே தெருத் தெருவாக மக்கள் மத்தியில் விநியோகிப்பர்.அது ஒன்றுதான் மக்களுக்கும் எமக்குமான ஊடகம் அப்போது.’சிறீலங்கா அரசயந்திரத்துக்கான இந்த தேர்தலை நிராகரிப்போம்’ என்ற தலைப்புடன் தலைவரின் பெயரில் வெளியான அறிக்கை வெளியிடப்பட்ட அந்தநாளில் இலங்கைத்தீவின் அரசியல்அரங்கு திகைப்படைந்தது.அதிர்ச்சிகொண்டது.சிங்களஅரசியல் சக்திகளைப் பொறுத்தவரையில் ஒரு சிறியகொரில்லா அமைப்பு இதனை எப்படி சாத்தியமாக்கபோகிறது என்று எண்ணியது.ஆனால் தமிழ்அரசியல் புள்ளிகளோ என்னஇது புதுமுறை என்று கேள்விகளுக்குள்ளும் திகைப்புக்குள்ளும் முடங்கி நின்றது.தேசியதலைவரோ அடுத்த கட்டத்துக்காக திட்டத்தில் இருந்தார்.
மிகக்கடினமான காலம் அது.ஒரு கெரில்லா இயக்கமாக அதுவரை அறியப்பட்டிருந்த அமைப்பின் ‘சிங்களதேர்தலை நிராகரிக்கும்’ அறிவிப்பை தொடர்ந்து சிங்கள ஆயுதப்படைகளும் அதனுடைய முதுகெலும்பான புலனாய்வும் விழித்துக் கொண்டது.தேர்தல் நடைபெறவேண்டிய யாழ்ப்பாணம்,வல்வெட்டித்துறை, பருத்தித்துறை,சாவகச்சேரிப்பகுதிகளில் சிறீலங்காவின் புலனாய்வு தனது வலையை செறிவாகவும் ஆழமாசவும் விரித்தது.அதற்குள்ளாக தினமும் நடமாடுவது மரணத்துக்கும் வாழ்வுக்குமான புள்ளியில் ஆடியது.அப்படி இருந்தும் தலைவரும் உறுப்பினர்களும் தினமும் ஏறத்தாள முப்பதிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர்து}ரம் மக்கள் மத்தியில் அலைந்துதிரிந்து வேலைசெய்தனர்.
இவ்வளவு கெடுபிடிகள் சுற்றிவளைப்புகளுக்கும் மத்தியி லும் தலைவர் அடுத்தகட்டதிட்டங்களாக வேலையை நகர்த்தினார்.முதலில் தலைவரின் பெயரால் ‘தேர்தலை புறக்கணிக்கும்’படி அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் தமிழ்கட்சிகளுடன் சந்தித்து விடுதலைப்புலிகளின் தேர்தல் புறக்கணிப்புக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகும்படி கேட்கும்படி அடுத்தநகர்வை செய்தார்.தலைவரின் திட்டத்துக்கு அமைய இயக்கஉறுப்பினர்கள் முதலில் தமிழ்காங்கிரஸ்,தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளர்களின் வீடுகளுக்கு சென்று தேர்தலைபுறக்கணிப்பு சம்பந்தமான மணிக் கணக்கான விளக்கங்களை சொன்னார்கள்.இதில் வரலாற்றில் பதிவுசெய்யவேண்டிய ஒரு முடிவு அன்றைய தமிழ்காங்கிரஸ் தலைவர் குமார்பொன்னம்பலத்தால் எடுக்கப் பட்டது.இயக்கஉறுப்பினர்கள் விளக்கம் சொன்னமறுநாளே தமிழ்காங்கிரஸ் தனது அனைத்து வேட்பாளர்களையும் போட்டியிலிருந்து விலகும்படி செய்தது. ஆனால் கூடுதலான தமிழர்கூட்டணி வேட்பாளர்கள் பலமான விளக்கங்களுடனான
அலைச்சலுக்கு பிறகே போட்டியிலிருந்து விலகினார்கள்.
முதலில் மக்களுக்கான அறிவிப்பு,பிறகு தமிழ்க்கட்சி வேட்பாளர்களை போட்டியிலிருந்து விலகச்செய்தல் என இரண்டுதிட்டங்கள் முடிந்தநிலையிலும் தேர்தல் களத்தில் சிங்களகட்சிகளின் வேட்பாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.அவர்களுடனான அணுகுமுறையை எதிரிகளுடனான அணுகுமுறையாகவே கையாளவேண்டும் என்று தலைவர் முடிவெடுத்தார்.அதன்படி ஆயுதரீதியாக எமதுமக்களை அடிமைகொண்ட சிங்கள கட்சிகளின் வேட்பாளர்களுடன் அதே ஆயுதரீதியாகவே அணுகமுடிவு எடுக்கப் பட்டது.தேர்தல்நடைபெற இருந்த நான்கு இடங்களிலும் போட்டியிட்ட சிங்கள கட்சிகளின் முதல்வேட்பாளர்மீதான தாக்குதலுடன் சிங்களகட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தை பெரிதும் நிறுத்திக்கொண்டார்கள்.முக்கியமானது என்னவென்றால் தலைவர்திட்டமிட்டதுடன் மட்டும் நிற்காமல் தானும் துண்டுப்பிரசுரம் கொடுப்பது, வேட்பாளர்களுடன் கதைப்பது,சிங்களகட்சியின் வேட்பாளர்களை ஆயுதம்மூலம் இல்லாமல் செய்வது என எல்லாவற்றிலும் தலைவரும் நேரடியாகதானும் பங்குகொண்டது எல்லாஉறுப்பினர்களுக்கும் ஊக்கத்தை கொடுத்தது.
இவ்வளவுநடந்தும் சிங்களம் இந்த தேர்தலை நடாத்திமுடிப்பது என்றே கங்கணம்கட்டி நின்றது.திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று தனது வானொலிமூலம் ஒருநாளைக்கு நிறையமுறை திரும்ப திரும்ப சொன்னது.தலைவர் தனது அடுத்த கட்டத்தை முடிவெடுத்தார்.அனைத்து உறுப்பினர்களையும் நான்குபிரிவுகளாக்கி தேர்தல்நடைபெறும் நான்கு இடத்துக்கு அனுப்பினார்.இந்த தேர்தல் தமிழ்மக்களுக்கு எதுவும் பெற்றுத் தராது என்றும் இது சிறீலங்காஇனவாத அரசின் அடக்குமுறையை சட்டரீதியானதாக்கும் ஒருவித சிங்களபேரினச்சதி என்றும் மக்களுக்கு தினமும் விளக்கமளிக்கும்படி கூறினார்.
அந்தநாளும் வந்தது.1983 மே 18.முப்படைகளையும் அனைத்துவிதமான வளங்களையும் கொண்ட சிங்களஆட்சியாளர்களுக்கும் தமழீழ மக்களையே தமது பலமாக நம்பிய ஒரு சிறிய இயக்கத்துக்குமான பலப்போட்டியாகவே அன்று விடிந்தது.அரசாங்கம் வாக்குச்சாவடிகளை திறக்கமுன்னரே சில வாக்குச்சாவடிகளின் முன்னர் சிறிய பைப்குண்டுகள் வெடித்தன.மிகப்பெரிய ஒரு அனர்த்தத்துக்கான முகவுரையாகவே அந்தச்சிறிய குண்டுகள் அதிகாலையில் வெடித்தன.அன்று மதியம்வரை எல்லா வாக்குச்சாவடிகளும் வெறுமையாகவே ஈ ஓட்டிக்கொண்டிருந்தன.எல்லாவாக்குச் சாவடிகளுக்கும்சிங்களராணுவம் காவலுக்குநின்றது.கொழும்பிலிருந்து கொண்டு தமிழீழமக்களை ஆளும்கனவில் மிதந்துகொண்டிருந்த சிங்களஆட்சியாளர்களுக்கு எமது மக்கள் தமது ஒன்றுதிரண்ட தேர்தல்புறக்கணிப்புமூலம் தமது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.நேரம்செல்லச் செல்ல மக்கள்வாக்களிக்க வராததை கண்டபடையினர் பலவந்தமாக வாக்களிக்க சில சாவடிகளில் அழைத்தனர்.
இந்த நேரத்தில் தலைவர் தனது அடுத்த திட்டத்தை இறக்கினார்.ஆயுதப்படைகளின் காவலுடன் தமிழர்நிலங்களில் நடைபெறும் தேர்தல்ச்சதிக்கு அதன் உயிர்நிலையிலேயே அடிகொடுத்தார்.யாழ் கந்தர்மடம் தேர்தல் நிலையத்தில் காலலுக்கு நின்ற ராணுவத்தின் மீது சீலனின் தலைமையில் அதிரடித் தாக்குதல் நடாத்தப்பட்டு கோப்ரல் ஜெயவர்த்தனா என்ற அதிகாரி கொல்லப்பட்டு அவனிடமிருந்து ரி56 துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்படுகிறது. இப்படியாக மாலையுடன் வாக்களிப்புமுடிகிறது.இரவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது பருத்தித்துறையில் 98வீதமானமக்களும்,வல்வெட்டித்துறையில் 96வீதமான மக்களும்,சாவகச்சேரியில் 92 வீதமானமக்களும்,யாழ்ப்பாணத்தில் 94வீதமான மக்களும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்துஇருந்தார்கள்.
ஒரு அரசியல்ரீதியான நகர்வை மிகவும் சொற்பஉறுப்பினர்களை வைத்துக்கொண்டு வெற்றிகரமாக நகர்த்திய தேசிய தலைவரின் அயராதஉழைப்பு,எதற்கும் கலங்காத பயணம் என்பன இன்னும் இன்னும் பலநு}று வருடங்களுக்கும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தத் தேர்தல் புறக்கணிப்பு என்பது மக்கள் வாக்களிக்காமல்விட்டது என்பதற்கு அப்பால் அதன் முடிவுகள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் அதன் அடுத்த
கட்டபோராட்டத்துக்கும் நிறைய செய்திகளையும் படிப்புக்களையும் வளங்களையும் சேர்த்துதந்தது.
தேர்தலில் சராசரியாக 94வீதமான மக்கள் வாக்காளிக்காதது எமக்குப் பெரிய வெற்றி என்று எமது உறுப்பினர்களும் மக்களும் குது}கலித்துக் கொண்டிருந்த வேளையில் தலைவர் தனது அடுத்த நகர்வுக்கான திட்டத்தை சீலனுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.அவர் எப்போதுமே இப்படித்தான். வெற்றியில் குது}கலித்தோ தோல்வியில் குந்தியிருந்ததோ ஒருபோதும் இல்லை. அவருடைய ஒரே நோக்கம் விடுதலை..விடுதலை…விடுதலையே.அதை நோக்கியே அவர் நகர்ந்துகொண்டிருந்தார்.இப்போதும் அவரின் வரலாறே விடுதலையை நோக்கி எம்மை நகர்த்தும் ஒரே கையிருப்பாக எம்மிடம் இருக்கிறது. விடுதலையை நோக்கி எம்மை கருத்துரீதியாகவும் அனைத்து ரீதியாகவும் நம்மை நாமே ஒற்றுமையுடன் நகர்த்துவதே அவருக்கான நன்றியறிதல் ஆகும்.
நன்றி: அலைகள்

0 Responses to தேசியத்தலைவரை புரிந்து கொள்ளுதல் ச.ச.முத்து