Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாய்லாந்து விமான நிலையத்தில் ஆயுதங்களுடன் மீட்கப்பட்ட எல் 76 ரக இராணுவ சரக்கு விமானத்தில் இருந்து கைதான ஐந்து பேருக்கும்..

பிணை வழங்க அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தாய்லாந்து அதிகாரிகளால் ஐக்கிய நாடுகள் சபையிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடகொரியாவில் இருந்து வந்த விமானத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் இந்த விமானத்திலிருந்த ஆயுதங்களுக்கும் இலங்கைக்கும் தொடர்பு இல்லை என இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நான்கு கஸகஸ் தானியர்கள் உள்ளிட்ட 5 வெளிநாட்டவர்கள் இவ்விமானத்திலிருந்து கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கான அனுமதி கோரி விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்க முடியாது என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது பொலிஸ் குற்றக்கட்டுப்பாட்டுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் குற்றவியல் நீதிமன்ற அனுமதியின் பின்னர் பாங்கொக் விஷேட சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to ஆயுதங்கள் கடத்திய விமானத்தில் கைதான ஐந்து பேருக்கு பிணை வழங்க மறுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com