மலேசியாவில் இருந்து கடத்தப்பட்டதாக, கைது செய்யப்பட்டதாக, சரணடைந்ததாகப் பேசப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ள சிங்கள இதழான லக்பிம, எதிர்வரும் வாரமளவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்வார் என பாதுகாப்பு அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளது. இதன்போது, கடந்த கால விடுதலைப் புலிகளின் செய்றபாடுகளை இவர் அம்பலப்படுத்துவார் எனவும், புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டப்படுவது மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர் அம்பலப்படுத்துவார் எனக் கூறப்படுகின்றது.
வன்னியில் இறுதிவரை நின்று கடமையாற்றிய தமிழ் மருத்துவர்கள் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு ஒரு சில மாதங்களின் பின்னர் ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அப்போது தாங்கள் வன்னியில் இருந்து தெரிவித்த கருத்துக்கு முரணான தகவல்களை வழங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருந்தனர்.
தற்போது சிறீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து செயற்படும் கே.பி அவர்களும் அவ்வாறான முரணான தகவல்களையே வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், சிறீலங்கா ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவிற்கு வாக்குகளை கவரும் விதத்தில் இவரது ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
நன்றி: சங்கதி

0 Responses to ஊடக சந்திப்பில் கலந்துகொள்கிறார் கே.பி !