வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என்பது உட்பட 29 நிபந்தனைகளை மகிந்த ராஜப்கச ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க தயார் என்று சிஹல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் தேர்தலில் மகிந்தவுக்கான ஆதரவை வழங்குவதற்கு தாம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கில் போரின்போது அழிந்துபோன விகாரைகளை மீளப்புனரமைக்கவேண்டும், வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் வலையமைப்பை முற்றாக அழித்தொழிப்பதற்கு வெளிவிவகார புலனாய்வு பிரிவு ஒன்றை அமைக்கவேண்டும், நாடாளுமன்றுக்கு பதில் கூறக்கூடிய புதிய நிறைவேற்று அதிகார முறையிலான அரச தலைவர் பதவியை அறிமுகம் செய்யவேண்டும் என்பவை உட்பட 29 நிபந்தனைகள் அடங்கிய தமது கட்சியின் வரைவை அரச தலைவர் மகிந்தவிடம் கையளித்துள்ளதாக தேரர் தெரிவித்தார்.

0 Responses to வெளிநாடுகளில் புலிகளை அழிக்கவேண்டும்: ஹெல உறுமய