Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையுடனான உறவுகளை அமெரிக்கா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான செனட் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிடியில் இருந்து இலங்கை விலகிப்போவதை அனுமதிக்கக் கூடாது என்றும் செனட்ட சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பான அணுகுமுறைகளை மாற்றியமைப்பதன் மூலமும் காத்திரமான தொடர்பாடல்களின் ஊடாகவும் இலங்கை மேற்குலக நாடுகளின் கைகளில் இருந்து நழுவிச் செல்;வதைதடுக்க முடியும் என்றும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

மேற்குலக நாடுகளிற்கு எதிரான சக்திகளான ஈரான் மற்றும் மியன்மார் போன்ற நாடுகளுடனான இலங்கை அரசாங்கத்தி;ன் நெருக்கம் தொடர்வது ஆபத்தானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடு என்ற வகையில் இலங்கையில் அமெரிக்காவின் பிரசன்னம் மிகவும் முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்கு முறைகளுக்கு எதிரான கடுமையான போக்குகளை அமெரிக்கா தொடர வேண்டியத அவசியம் என்றும் அதே சமயம் வேறு விடயங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு அனுசரணையான சில பேகாக்குகளை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும் என்றும் செனட் குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பில் புதிய அணுகுமுறைகள் பின்னபற்றப்படுவதன் மூலமே அமெரிக்காவினதும் மேற்குலக நாடுகளினதும் கட்டுப்பாட்டில் இலங்கையை கைத்திருக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அமெரிக்காவின் பிடியில் இருந்து இலங்கை விலகிப்போவதை அனுமதிக்கக் கூடாது: அமெரிக்கச் செனற்சபை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com