தமிழ் மக்களின் ஒரே விருப்பம் இறைமையுள்ள சுதந்திரமான தனித் தமிழீழம்தான் என்பதை வெளிப்படுத்தும் வாக்கெடுப்பில் பிரான்சில் வாழும் தமிழீழ மக்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்தோடும், உணர்வோடும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது ஆண்கள் பெண்கள் அனைவரும் பங்குபற்றி வாக்களித்துவருகிறார்கள்.
பிரான்சின் சட்டங்களுக்கு அமைவாக கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் வாக்களிக்கப்பட்டு வருகின்றது. இன்று சனிக்கிழமை இரவு 20.00மணிவரையும் வாக்களிப்பு நடைபெறும்.
அதேவேளை நாளை காலை 08.00மணியிலிருந்து பி.ப.15.00மணிவரையும் வாக்களிப்பு நடைபெறும். பிரான்சில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தமிழன் என்பதை உறுதிசெய்து வாக்களிக்கவேண்டும்.
மிகவும் இக்கட்டான காலச்சூழலுக்குள் தமிழினம் உள்ளாகியுள்ள நிலையில் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். அதுவே ஈழத்தமிழர்களின் பலமாகும். எனவே அனைத்து தமிழ் மக்களையும் வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை அழைப்பு விடுக்கின்றது.

0 Responses to பிரான்சில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வாக்கெடுப்பு முதலாம் நாள்