சிறிலங்காவில் எந்த குடிமகனும் இன்னொருவரை கொலை செய்வதற்கு உரிமை உண்டு என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள நாளிதழ் ஒன்று வழங்கிய செவ்வியின்போது பொன்சேகா பற்றி கேள்வி கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சிறிலங்காவில் எந்த குடிமகனும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு உரிமை உண்டு அல்லவா? என்று செய்தி நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கோத்தபாய - ஆம்.ஆம் யாரும் யாரையும் கொலை செய்வதற்கு உரிமை உண்டு கூறியுள்ளார்.
அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கும் கொலை செய்வதற்கும் என்ன தொடர்பு என்று அந்த நிருபர் கேட்டபோது - எவரும் எதுவும் செய்யலாம் என்ற உரிமை உள்ளது என்று கூறிக்கொண்டு எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. செய்யும் காரியத்தில் ஒரு நீதி இருக்கவேண்டும். நியாயம் இருக்கவேண்டும் என்று கோத்தபாய விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பொன்சேகா பற்றி கூறுகையில் - பொன்சேகா இன்று அதிகாரப்பசியிலும் பதவிவெறியிலும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று தெரிவித்தார்.
நன்றி: ஈழநேஷன்

0 Responses to யாரும் யாரையும் கொலை செய்யலாம்: கோத்தபாய