Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தஞ்சையில் உலகத் தமிழர் பேரவையின் 7ஆம் ஆண்டு நிறைவு விழாவும், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடும் நேற்று காலை விமரிசையாகத் துவங்கியது. மாநாடு துவங்குவதற்கு முன்னர் இராமநாதன் சாலையிலுள்ள சிவாஜி சிலையருகிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. அப்போது அங்கிருந்த மாநாட்டுப் பதாகைகளை காவல் துறையினர் அகற்றியுள்ளனர்.

இதனையடுத்து உணர்வாளர்களுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நகராட்சி ஆணையர் உத்தரவிற்கு இணங்கவே பதாகைகள் அகற்றப்பட்டதாகக் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை எதிர்த்து தமிழர் தலைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு மேற்கொண்டு பதாகைகள் அகற்றுவது நிறுத்தப்பட்டது.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் மாநாட்டு ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மாநில துணை செயலர் மகேந்திரன், தமிழரசி ஆசிரியர் மா. நடராசன், இறைக்குறவனார், இரா. பத்மநாதன் ஆகியோருடன் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழரசி திருமண மாளிகையில் மாநாடு தொடங்கியது. இறைக்குறவனார் கொடியேற்றி வைத்து உரையாற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார். ஈழத்தில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் இனப் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் இரத்தம் கலந்த மண் கொண்டுவரப்பட்டு மாநாட்டு மேடையில் பரப்பப்பட்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியாக மொழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டது. அதற்கு அருகில் போர் நிறுத்தம் கோரி தங்களை தீக்கீரையாக்கிக்கொண்ட முத்துக் குமார் உள்ளிட்ட 16 தியாகிகளின் படங்கள் வைக்கப்பட்டு மொழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நன்றி: சங்கதி

0 Responses to தஞ்சையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு ஆரம்பம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com