அதிபர் தேர்தலில், ராஜபக்சேவை எதிர்த்து, எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும், சரத் பொன்சேகா, நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது அவர், ‘’எதிர்க்கட்சிகள் மாநாடு தொடர்பாக, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள், சில அரசியல் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளனர். தற்போது, மீடியாக்கள் மீது அடக்குமுறையை ஏவிட சில அரசியல் சக்திகள் முயற்சிக்கின்றன.
தற்போதைய நிகழ்வுகள் மூலம், மீடியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் யார், எதிராக செயல்படுவோர் யார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
இதை கவனத்தில் கொண்டு, பத்திரிகையாளர்கள், நேர்மையான முறையில் செய்தி வெளியிட வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். நான் அதுபோல் செயல்பட மாட்டேன். இதுபோன்ற நடவடிக்கைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
நான் ஆட்சிக்கு வந்தால், மீடியாக்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படும். கடந்த ஒரு ஆண்டாக இலங்கையில் மீடியாக்கள் மீது நடக்கும் தாக்குதல்களை, சர்வதேச அமைப்புகள் கண்டித்துள்ளன’’என்று கூறியுள்ளார்.

0 Responses to நான் ஆட்சிக்கு வந்தால்....: பொன்சேகா பேட்டி