Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்க அரசு தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறை, அதற்கு எதிரான ஒருதலைப்பட்சமானதாக இராமல், அமெரிக்காவின் இராணுவ நலனையும் உட்படுத்தியதாக இருக்க வேண்டும் என்று கோரும் ஒரு அறிக்கை தயாராகி வருகிறது.

அமெரிக்க செனட் அவையின் இரண்டு முக்கிய உறுப்பினர்களான ஜான் கெர்ரி (ஜனநாயகக் கட்சி), ரிச்சர்ட் லூகர் (குடியரசுக் கட்சி) ஆகியோரின் ஒப்புதலோடு உருவாகிவரும் இந்த அறிக்கை, அமெரிக்காவின் இராணுவ நலனை காப்பாற்றும் வகையில், அந்நாட்டிற்கு ஆதரவான ஒரு நிலையை முன்மொழியும் வகையில் உள்ளது.
அந்த அறிக்கையின் நகலை நியூ யார்க் டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரில் சிறிலங்க அரசும் அதன் படைகளும் நடத்திய மனித உரிமை மீறல்கள், செய்த போர்க் குற்றங்கள் ஆகியவற்றை மட்டுமே மையமாகக் கொண்டு ஒரு மோதல் போக்கை அமெரிக்கா கடைபிடித்து வருவதைத் தவிர்த்து, போரினால் இடம் பெயர்ந்த மக்களை விடுவித்து, அவர்களுடைய வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தியது, போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை மறு சீரமைப்புச் செய்துவருவது ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் அணுகுமுறை இருக்க வேண்டும்என்று அந்த அறிக்கை பராக் ஒபாமா அரசிற்கு ஒரு ஆலோசனை அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருவதாக வாஷிங்டன் செய்திகள் கூறுகின்றன.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்துவிட்ட நிலையில், அமெரிக்காவின் பார்வை அப்பகுதியின் பொருளாதார, இராணுவ எதார்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று கூறும் அந்த அறிக்கை, ‘வெறும்மனிதாபிமான பார்வை மட்டுமே கொண்டிருக்காமல், அப்பகுதியின் பூகோள நலனையும் உத்தேசித்து அமெரிக்காவின் அணுகுமுறை மாறவேண்டும் என்று அமெரிக்க அரசிற்கு ஆலோசனை கூறுகிறது.

இந்த அறிக்கையே விரைவில் அமெரிக்காவின் சிறிலங்கா தொடர்பான புதிய கொள்கை அறிக்கையாக வெளியிடப்படலாம் என்று நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to சிறிலங்கா தொடர்பான அமெரிக்க அணுகுமுறை மாறும்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com