அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா அரசு மேற்கொண்டுவரும் கடும்போக்கை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) சிட்னி நகரில் அவுஸ்திரேலியா மக்களினால் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அவுஸ்திரேலியா அரசு அகதிகள் தொடர்பாக கடைப்பித்துவரும் கடும்போக்கு கொள்கைகளை கைவிட வேண்டும், இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன.
150 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த பேராட்டத்தில், தற்போதைய அவுஸ்திரேலிய பிரதமரின் கொள்கையானது இனவாதம் மிக்கது எனவும், சிறீலங்கா அரசின் பிடியில் தமிழ் மக்கள் கடும் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ்தீவில் உள்ள தடுப்பு நிலையங்களை அவுஸ்திரேலியா அரசு மூடவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தை அகதிகளுக்கான செயல்பாட்டு கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.
அதற்கு பல சமூக மற்றும் அரசியல் அமைப்புக்களும் தமது ஆதரவுகளை வழங்கியிருந்தன. நகரமண்டபத்தில் ஆரம்பமாகிய இந்த பேரணி நகரத்தின் மிக முக்கிய பகுதியை நோக்கி நகர்ந்ததுடன், அதில் கலந்து கொண்டவர்கள் பல சுலேகங்களையும் தாங்கி சென்றிருந்தனர்.

0 Responses to அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா அரசின் போக்கை கண்டித்து அவுஸ்திரேலியா மக்கள் பேரணி