எதிர்வரவுள்ள சிறிலங்காவுக்கான அரச தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் காத்திருந்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் தற்போதைய அரச தலைவர் மகிந்தவுக்கே ஆதரவளிக்கவுள்ளதாக பிள்ளையான் அறிவித்த நிலையில் தற்போது தனது குழுவிலுள்ள உறுப்பினர்கள் அம்முடிவிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளதால் பொறுத்திருந்து முடிவுவெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமது குழுவினர் அதிகார பரவலாக்கலை உறுதிப்படுத்த விரும்புவதாகவும் 13 வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு காணப்படவேண்டுமென விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே மகிந்த ராஜபக்சவுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் சாதகமான பலன் கிட்டவில்லையெனவும் அதனால்தான் தற்போதைய முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to சிறிலங்கா அரச தலைவர் தேர்தல்: பிள்ளையான் குழுவும் காத்திருக்க முடிவு