Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரணடைந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் உட்பட முக்கிய தலைவர்கள் கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைப்படியேதான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்பதை சிறிலங்காவின் அரச தலைவருக்கான வேட்பாளர் சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு கொடுக்கப்பட்ட நேர்காணலில் உறுதிப்படுத்தினார்.

போரின் இறுதிக்கட்டத்தின்போது விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் சர்வதேசத்தின் அனுசரணையுடன் நடைபெற்றுக்கொண்டிருந்ததை பற்றி தனக்கு எந்தவிதமான தகவல் பரிவர்த்தனைகளும் செய்யப்படவில்லை எனவும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் நோர்வே பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச தலைவருக்கான ஆலோசகர் ஆகியோர் மட்டுமே இத்தொடர்பாடலில் இருந்தார்கள் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்சே இத்தகவலை கோத்தபாய ராஜபக்சேக்கு சொன்னதாகவும் அதனை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்சே 58 வது படையணிகளின் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வாவுடன் தொடர்புகொண்டு சரணடைகின்ற விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லும்படி பணித்திருந்ததையும் பின்னரே அறிந்துகொண்டேன்என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 18 ஆம் திகதி அதிகாலை சர்வதேச வழிகாட்டுதல்களுடன் வெள்ளைக்கொடிகள் ஏந்தியவாறு சென்ற பா. நடேசன் புலித்தேவன் ரமேஸ் உட்பட பல காயமடைந்திருந்த போராளிகள் பொதுமக்கள் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டமை தெரிந்ததே.

இவ்விடயம் தொடர்பாக பிரிகேடியர் சவேந்திர சில்வாவுடன் தொடர்பு கொண்டபோது அவர் இதுபற்றி கருத்துதெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.

0 Responses to நடேசன், புலிதேவன், ரமேஸ் ஆகியோரை சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டவர் கோத்தபாய: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com