
தடுப்புக்காவலில் உள்ள மிக முக்கிய விடுதலைப்புலிகள் உறுப்பினர் ஒருவரின் மூலம் இந்த தகவல் பெறப்பட்டதாகவும் இந்த நபர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமான 20 பேரில் ஒருவர் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தடுப்புக்காவலிலுள்ள இந்த நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் இரண்டாயிரம் கிலோகிராமுக்கும் அதிகமாக அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
விடுதலைப்புலிகளினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த பாரிய தற்கொலை தாக்குதலுக்கு விரிவான திட்டம் அமைக்கப்பட்டு அதற்குரிய பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் இந்த தாக்குதலுக்காக ஒருவர் கிட்டத்தட்ட 7 கிலோ வெடிபொருட்களை கொண்டுசெல்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் படையினர் முன்னேறி வரும்போது அவர்களின் மீதும் படைக்கலங்கள் மீதும் மோட்டார் இலக்குகள், ஆட்லறி தளங்கள் ஆகியவற்றின் மீதும் இந்த தாக்குதலை ஊடுருவி சென்று மேற்கொள்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை கடைசி நேரத்தில் மேற்கொள்ளமுடியாமல் போய்விட்டதாகவும் அந்த பணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பலர் படையினருடனான மோதலில் உயிரிழந்தும் காயமடைந்துமுள்ளனர். ஏனையவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னாரில் முள்ளிக்குளம் சிலாவத்துறை பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 1004 கிலோ எடையுள்ள சி-4 வெடிபொருளை காவல்துறையினர் மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதுவரை மீட்கப்பட்ட வெடிபொருள் தொகுதியில் இதுவே மிகப்பெரியதும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: ஈழநேஷன்
0 Responses to இறுதிநேர போரின்போது 300 தற்கொலைகுண்டுதாரிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்ட புலிகள்