Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போராட்ட வடிவங்கள் மாறலாம்,போராட்டம் மாறாது எனும், தேசியத் தலைவரின் வேதவாக்கிற்கிணங்க, நாடு கடந்த தமிழீழ அரசு எனும் ஓர் சிறந்த போராட்டத்தை நீங்கள் கையில் எடுத்துள்ளீர்கள். அதன் மூலம் ஈழத்தமிழ் மக்களின் புண்பட்ட இதயங்களுக்கு மருந்து தடவி பூரிப்படைய வைத்துள்ளீர்கள்.

இந்த முயற்சியை வேற்று இன அறிஞர்களும், சட்டவல்லுனர்களும் பாராட்டுவதை எண்ணி பேருவகைகொள்கின்றோம். இந்த முன்னெடுப்பை புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் நோய் தீர்க்கும் அருமருந்தாக எண்ணி வரவேற்கின்றபோதும், மக்களை அணுகும் முறையில் சில குறைபாடுகள் காணப்படுவதால், மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட முடியாத நிலைமைகள் தோன்றுகின்றன.

எனவே இதனை மனதில்கொண்டு மக்கள் சிதறுண்டு வாழும் தேசங்களில், ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள, இனவிடுதலைக்காக, மண்விடுதலைக்காக உழைக்கும் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படும்போது இலகுவாக எங்கள் மக்கள் அனைவரையும் ஓர் குடையின் கீழ் ஒன்றிணைத்து, எம் விடுதலைச் சக்கரத்தை முன்நகர்த்திச் செல்லமுடியும். அதையே ஈழத்தமிழ் மக்களும் விரும்புகின்றனர்.

மாவீரர்களின் தியாகங்களை எங்கள் இதயத்தில் இருத்தி, அவர்கள் சிந்திய இரத்தத்திற்கு மதிப்பளித்து, மாவீரர் கனவை நினைவாக்குவதே தமிழ் மக்களாகிய எம் ஒவ்வொருவரின் தலையாய கடமை என உறிதியெடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து விடுதலைத் தேரின் வடம்பிடிப்போம்.

யேர்மன் திருமலைச்செல்வன்.

தலைவர்

யேர்மன் எழுத்தாளர் சங்கம்.

மின்அஞ்சல்: german-tamil-eluththaalar-sankam@hotmail.com

0 Responses to நா.க.த.அரசை இனவிடுதலைக்காக, மண்விடுதலைக்காக உழைக்கும் அமைப்பின் ஊடாக முன்னெடுக்க வேண்டும்: யேர்மன் எழுத்தாளர் சங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com