யாழ் குடநாட்டிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட விஜயம் தோல்வி அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.ஜனாதிபதியை நேரில் சந்திக்க மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டுவார்கள் என் எதிர்பாhக்கப்பட்ட போதிலும் அவ்வாறன நிலை நேற்று அங்கு காணப்படவில்லை என்று செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் வருகைக்கு முன்னராக ஈ.பி.டி.பி.பியினால் மக்கள் பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டதக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.யினால் மக்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டம் நடைபெறும் இடத்தில் செற்கையான மக்கள் கூட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட போதிலும் இது குறித்து மகிந்த ராஜபக்சவின் புலனாய்வு பிரிவு உண்மையான நிலைமைகளை அவருக்கு தெரியப்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து ஈ.பி.டி.பியின் செயலளாரும் அமைச்ருமான டக்களசிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதை மகிந்த ராஜபக்ச தெளிவாக அறிந்து கொண்டதாகவும் அவரை நம்பி இனி பயனில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடன் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தாமகவே ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையை உருவாக்க டக்ளஸ் தவறியுள்ளதாக மகிந்த ராஜபக்ச நேரடியாவே டக்ளசிடம் கூறியுள்ளார்.
மக்கள் மத்தியில் தன்கு ஆதரவில்லாத நிலையில் உயர் பாதுகாப்பு வலய நீக்கம் குறித்த அறிவிப்பினையும் மகிந்த வெளியிடவில்லை என்று தெரியவந்துள்ளது.
இதேவேளை நாகவிகாரைக்கு அண்மையில் உள்ள உயர் கல்வி நிலையம் ஒன்றிற்கு மகிந்த சென்ற போது அங்குள்ள மாணவர்கள் அவரின் வருகைக்குஎதிர்பபு தெரிவிக்கும் கோசங்களை எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவிற்கு யாழ்பபாணத்தில் வாக்குகள் கிடைகாகது கொழும்பிற்கே திரும்ப சென்று விடு என்பது போன்ற கோசங்களை மாணவர்கள் எழுப்பியுள்ளனர்.
இதன் காரணமாகவும் மகிந்த டக்ளஸ் மீத கடுமையான ஆத்திரம் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு கோசம் எழுப்பிய மாணவர்களை பி;ன்னர் கவனித்துக் கொள்வதாக டக்ளசின் கூலிப்படைகள் எச்சரித்து விட்டுச் சென்றுளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.












0 Responses to மகிந்தவின் யாழ் பரப்புரைப் பயணம் தோல்வி! (படங்கள் இணைப்பு)