சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலுக்கான பிரசார பயணத்தினை யாழில் இருந்து ஆரம்பிக்கும் விதமாக இன்று யாழ்ப்பாணத்திற்கு மகிந்த ராஜபக்ச வருகை தந்துள்ளார்.இவ்வாறு தமிழ் மக்களது வாக்கினை குறிவைத்து யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்கள பேரினவாதத்தின் தலைவர் மகிந்தவினது பிரசார கூட்டத்திற்கு மக்களை வலுக் கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் தமிழின துரோகிகள் தமது விசுவசத்தினை கட்டுவதற்காக மக்களை வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளனர்.
வடமராட்சி பிரதேசத்தில் இருந்து இவ்வாறு மகிந்தவின் பிரசார கூட்டத்திற்கு பொது மக்கள் வலுக் கட்டாயமாக ஈ.பி.டி.பி. கட்சியினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். வீதிகளில் சென்ற மக்களையும் கட்டாயப்டுத்தி அழைத்துசென்றுள்ளனர்.





0 Responses to மகிந்தவின் பிரசார கூட்டத்திற்கு மக்கள் கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டனர் (படங்கள் இணைப்பு)