Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாதந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கான இதய வணக்க நிகழ்வு கடந்த 10ம் திகதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு ரொறன்ரோவில் 1199 Kennedy Rd இல் அமைந்துள்ள Everest Banquet & Convention Center.மற்றும் கிப்லிங் பகுதியிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வினை கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் மற்றும் வலவைட்டித்துறை மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர் .

இவ்விதய வணக்க நிகழ்வானது ஈகைச்சுடரேற்றும் நிகழ்வோடு ஆரம்பமானது. ஈகைச்சுடர்களை மாதந்தையின் மருமகனான (மகளின் கணவரான) திரு பாலராசேந்திரம் அவர்களும் அவரின் மகள்வழிப் பேரனான பிரதீபனும்; மாவீர குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து ஏற்றினர்.

அதனைத் தொடர்ந்து இதுவரையில் மண்ணின் விடுதலைக்காக ஆகுதியான மாவீரர்கள் அனைவருக்காகவும் தாயக விடுதலைப் போரில் அநியாயமாக பலியான அப்பாவி பொதுமக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

நிகழ்ச்சி ஆரம்பித்த வேளையிலிருந்து முதல் ஆரம்ப ஒன்றரை மணிநேரம் மலர்வணக்கம் மட்டுமே செய்த வண்ணமும் பின் நிகழ்ச்சி நிறைவடையும் வரையில் சுமார் 4 மணித்தியாளங்களாக மக்கள் வெள்ளம் அலையலையாக அலைமோதி வந்துஅப்பாவிற்கு மலர் வணக்கம் செலுத்திய வண்ணமுமிருந்தனர்.

நிகழ்ச்சிகள் வரிசையில் குடும்ப உரையை ஜயாவின் மருமகனார் திரு. பாலராசேந்திரம் அவர்களும், வல்வை ஆவண காப்பக புகழ் நகுலசிகாமணி அவர்களும், மற்றும் தேசியத்தலைவரிற்கு தோள்கொடுத்துவந்த அவரது துணைவியார் மதிவதனி அவர்களின் ஊரவரும் உற்றாருமான புங்குடுதீவு மக்களான சு. குணரட்ணம் அவர்களும் எஸ். எம். தனபாலன் அவர்களும் ஆற்றினர்.

நிகழ்வில் நினைவெழுச்சி உரையாற்றியோர் உரைகளை உணர்வு பொங்க தொகுத்து வழங்கினார் திரு. சிவமோகன் அவர்கள்.

அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம், முன்னால் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஈழ வேந்தன், தமிழர் தகவல் ஆசிரியர் திரு திருச்செல்வம், படைப்பாளிகள் கழகத் தலைவர் தங்கவேலு, கனடா தமிழர் புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளர் குணநாதன், மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி, கனடியத் தமிழ் சமூகத்தின் சார்பில் ஈசன், உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு லோகேந்திரலிங்கம், ஸ்காபுரோ மகளிர் அமைப்பின் சார்பில் கவிதா, வல்வை சகாரா, இளையோர் அமைப்பைச் சார்ந்த நிசாந்தன், கவிஞர்தீவகம்இராசலிங்கம், மார்க்கம் கல்விச்சபை உறுப்பினர் நீதன் சண், சமூகசேவையாளர் விஷ்ணு அருள்சுந்தரம் ஆகியோர் இரங்கல் எழுச்சி உரைகளை ஆற்றினர்.

திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மகள் மருமகன் பேரன் ஆகியோர் கலந்துகொண்டு மாhந்தைக்கு இதய வணக்கம் செலுத்தினர். அத்துடன் மண்டபம் நிறைந்த பெருமளவு மக்களும் கலந்துகொண்டனர் இங்கு மாதந்தையின் மருமகன் பால இராசேந்திரன,; முன்னாள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மா..ஈழவேந்தன் உட்பட பலர் உரையாற்றயாற்றினர்.




0 Responses to வீர தந்தை வேலுப்பிள்ளை அவர்களுக்கு கனடாவில் வீர வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com