Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அன்பான சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!

பதிந்தவர்: தம்பியன் 14 January 2010

பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் சார்பாக எதிர்வரும் 23/24 ம் திகதி நடைபெறப்போகும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஏகமனதான தீர்ப்பாகிய, தமிழீழ தனியரசே தமிழ்மக்களின் இறுதித்தீர்வு என்பதை சுவிசு நாட்டிற்கும், உலகிற்கும் தெரியப்படுத்த நடைபெறப்போகும் கருத்துக்கணிப்புத்தேர்தல் எல்லா நாடுகளைப் போலவும் சுவிசு நாடும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. கடந்த கால ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில், புலம்பெயர் மண் தமிழீழ மக்களில் சுவிசு வாழ் மக்களின் பங்களிப்பானது மிகவும் காத்திரமிக்கதாகும்.

அங்கு வாழும் எமது மக்களும் அவர்களின் தாயகம் மீதான பற்றுதலும், பங்களிப்பு ஏனைய நாடுகளில் வாழும் தமிழ்மக்களுக்கு ஓர் முன்னுதாரணமாக கடந்த காலத்தில் இருந்துள்ளது என்பது எவராலும் மறக்கவும், மறைக்கவும் முடியாத உண்மை வரலாறாகும். எமது விடுதலைக்கு அரசியல் ரீதியில் வலுவேற்றும் முகமாக காலாகலமாக மேற்கொள்ளப்பட்ட ஜெனிவா பேரணிகளும், இனப்பிரச்சனைத் தீர்வுக்காக நோர்வேயால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் சுவிசு நாடும், மக்களும் பெரும் பங்கையாற்றியிருக்கின்றன.

இவற்றை உருவாக்குவதிலும், உணர்த்துவதிலும் முன்னின்றவர்கள் எமது தமிழ்மக்கள் என்பதையும் பெருமையாக கூறிக்கொள்ளலாம். எமது மக்கள் அல்லல்பட்டு துன்பப்பட்டு உயிரைகாக்க ஓடி வந்தபோது அவர்களுக்கு நெருக்கடியை கொடுக்காது அரவணைத்த மனிநேயமிக்க தொருநாடாகவும் சுவிசு நாடு தமிழ்மக்களின் நன்றிக்குரிய நாடாக திகழ்கின்றது. சிங்கள தேசம் தமிழ்மக்கள் எமது கனவுகளையும், நியாயமான எதிர்பார்ப்பினையும், கோழைத்தனமாக நாம் மதித்து நம்பிக்கை வைத்த அயல் வல்லரசினதும், மற்றும் பல்வேறு நாடுகளின் உதவியுடனும் ஒரு உயரிய பாதை முடமாக்கப்பட்டதும், பல்வேறு நம்பிக்கைகளுடன் இருந்த புலம்பெயர் வாழ் தமிழ்மக்களும் அதில் சுவிசுவாழ் தமிழ்மக்களும் அதிகளவில் சோதனைகளையும், வேதனைகள் அடைந்ததையும் நாம் அறிவோம்.

இல்லையேல் தேச விடுதலைநோக்கி பாதைத்தெரிவான இந்த வட்டுக்கோட்டை தீர்மான மீள்வாக்கு கருத்துக்கணிப்பினை நீங்கள் தான் செய்து உலகத்தமிழர்களுக்கு முன்னோடியாக இருந்திருப்பீர்கள். ஆனாலும் காலத்தின் தேவையும், அவசியமும் கருதி எம்மால் பல நெருகடியான காலகட்டத்தில் இங்குள்ள அனைத்து தமிழர் அமைப்புகளுக்குள் வாக்கெடுப்பு நடாத்தியதும் அதன் தொடராக நோர்வே நாட்டிலும், பின்னர் மீண்டும் பிரான்சிலும, கனடா என்றும் இனிவரும் நாட்களில் அனைத்து தமிழ்மக்கள் வாழும் நாடுகளில் இத்தேர்தல் நடாத்தப்பட்டு தமிழ்மக்கள் தமது மனதில் உள்ள தாயகப்பற்றை தெரிவிக்கப்போகின்றார்கள்.

இவ்வகையில் எதிர்வரும் 23/24 நாளில் நடைபெறப்போகும் கருத்துக்கணிப்பு தேர்தல் சுவிசுவாழ் தமிழீழ மக்கள் தமது ஒட்டுமொத்த வாக்குகளையளித்து இதுவரை காலமும் தாய் மண்ணையும், அந்த மண்ணின் வீரர்களின் கனவை நனவாக்க எவ்வாறு உள்ளத்தில் ஏற்று உதவினீர்களோ அதற்கு சற்றும் குறையாமல், குலையாமல் இன்னும் அதிகமாக வாக்குகளின் ஊடாக தனித்தமிழீழ அரசே எங்கள் தீர்வு என்பதை சுவிசு நாட்டுக்கும், சர்வதேச உலகிற்கும் தமிழனை இல்லாதொழிக்க நினைக்கும் சிங்கள தேசத்திற்கும், அதற்கு துணைபோகும் பாரததேசத்திற்கும், அதன் அடிவருடி தமிழ்த்தலைவர்களுக்கு முகத்தில் கரிபூசும் வகையிலும் எமது உணர்வுகளை, தேசப்பற்றையும் காட்டும் வகையில் உங்கள் வாக்குகளை அளித்து, உலகத்தமிழீழ மக்களுக்கு வலுச்சேர்ப்பீர்கள் என்கின்ற நம்பிக்கையோடும் வாழ்த்துதல்களையும் தந்து நிற்கின்றோம்.

உங்கள் எல்லோரின் பலமே எங்கள் அனைவரின் பெருமிதம்

நன்றி
இப்படிக்கு
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

0 Responses to அன்பான சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com