Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களால் வேறு நாடொன்றில் தஞ்சமடைந்துள்ள தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சினத்ரா கடந்த வருடம் டிசெம்பர் மாதம் சிறிலங்கா வந்து அரசின் தடுப்புக்காவலிலுள்ள கே.பியை சந்தித்து சென்றுள்ளார் என்று ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் -

கடந்த டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி சிறிலங்காவுக்கு வந்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் அரசதலைவர் மகிந்தவை அனுராதபுரத்திலும் கொழும்பிலும் இரண்டு தடவைகள் சந்தித்தார் என்றும் பின்னர் தடுப்புக்காவலிலுள்ள கே.பியையும் சந்தித்துள்ளார் என்றும் ஐந்து வர்த்த பிரதிநிதிகளுடன் வந்த தக்சினத்ரா, சிறிலங்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில் அவருக்குரிய சகல வசதிகளையும் அரசு செய்துகொடுத்தது என்றும் கூறினார்.

தக்சினத்ரா தாய்லாந்தின் பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் அவரின் செல்வாக்கை பயன்படுத்தி கே.பி. பல ஆயுத கொள்வனவுகளை மேற்கொண்டார் என்றும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆயுத கொள்வனவுகளுக்கு வாங்கப்பட்ட பெருந்தொகைப்பணம் தற்போது கே.பியிடமிருந்து பெறப்பட்டு சிறிலங்கா அரசதலைவர் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சிறிலங்கா வந்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் கே.பியை சந்தித்தார்: சோமவன்ச தகவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com