சென்னையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் உண்மையான பிரச்சினை மறைக்கப்பட்டு அவர்களின் பிரச்சினை திட்டமிட்டபடி திசை திருப்பப்படுகின்றது என வைகோ குற்றம் சுமத்தியுள்ளார்.
2009ஆம் ஆண்டு ஈழத்தில் தமிழின அழிப்பு இடம்பெற்ற பேரழிவ ஆண்டாகும். இந்திய அரசின் துணையுடன் இலங்கை அரசு நடத்திய இன அழிப்பாகும். ஓட்டுமொத்ததில் தமிழர்கள் வரலாற்றில் ஒரு துயர்மிகுந்த ஆண்டாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முள்வேலிக்குள் சிக்குண்டுள்ள மக்களை விடுவித்தலே இலங்கை இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என இந்தியாவும் இலங்கையும் உண்மையான பிரச்சினையை திசை திருப்ப எத்தனிக்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரமபிப்பதற்கு முன்னரே 1976ஆம் ஆண்டிலேயே இறைமையுள்ள சுதந்திரமான தமிழீழத் தனியரசான தமிழீழம் தான் தமிழர்களின் இறுதி இலக்கு என முழக்கம் எழுத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை அழித்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் புளங்காகிதம் அடைகிறது. உண்மையில் ஈழத்தமிழர்களின் பேராட்டம் இன்னும் ஓயவில்லை.
அது இன்றும் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. போராட்டம் மீண்டும் வெடிக்கும். நிச்சயம் தமிழீழம் அமையும் என வைகோ மேலும் கருத்துரைத்துள்ளார்.
0 Responses to ஈழத்தமிழர்களின் உண்மையான பிரச்சினை மறைக்கப்பட்டு திசை திருப்பப்படுகின்றது: வைகோ