நேபாளத்தில் உள்ள இந்தியர்களை மீட்டு, இந்தியாவுக்கு அவர்கள் அழைத்துவரப்பட்டு அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.இதில் இப்போது 24 தமிழர்கள் முதற்கட்டமாக இந்தியா வந்துள்ளனர்.
நேபாளத்தில் 24 முறை நில அதிர்வை இவர்கள் உணர்ந்ததாக உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவிக்கின்றானர். முதற்கட்டமாக 4 தமிழர்கள் டெல்லி வழியாகஇன்று காலை சென்னை வந்தடைந்தனர்.அவர்களில் ஒருவர் இமையமலை இரண்டு முறை அசைந்ததை தாம் நேரில் கண்டு மிகவும் அச்சமுற்றதாக கூறியுள்ளார். காத்மாண்டுவின் பழமையான கோயிகள் இடிந்து தரை மட்டமாகி காத்மாண்டு நகர் நிலை குலைந்துக் கிடப்பதாகவும், மக்கள் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டக்கூடும் என்கிற அச்சமும் நிலவி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதோடு மேலும் 20 தமிழர்கள் இன்று டெல்லி வந்தடைந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் சென்னை வந்து அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிய வருகிறது.

0 Responses to நேபாளிலிருந்து இருபத்து நான்கு தமிழர்கள் இந்தியா வந்தடைந்தனர்