திமுகவின் தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த முக.அழகிரி மதுரையில் இன்று தமது 63 வது பிறந்த நாளை வெகு உற்ச்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்.
மதுரையில் உள்ள தமது இல்லத்தில் கேக் வெட்டி தமது குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அழகிரி, அடுத்து தொண்டர்கள் முன்னிலையில் பிறந்தநாள் கொண்டாட மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்திற்கு சென்று, அங்கு தொண்டர்களின் வாழ்த்துக்களைப் பெற்று வருகிறார்.
வழக்கத்துக்கு மாறாக மதுரையில் இன்று தொண்டர்கள் கூட்டம் குவிந்துள்ளது. மதுரையில் இருந்து மட்டுமல்லாமல் அருகில் உள்ள சில மாவட்டங்களில் இருந்தும் முக.அழகிரி ஆதரவாளர்கள் திரண்டு உள்ளனர். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அழகியில் பிறந்தநாள் கொண்டட்டங்களை அழகு படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நடிகர்கள் நெப்போலியன், ரித்தீஷ் மற்றும் கேபி.ராமலிங்கம் ஆகிய மூன்று திமுக எம்.பிக்கள் நேற்றே மதுரை வந்து அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழகிரி தமது பிறந்த நாள் விழாவில் திமுகவில் நடக்கும் உண்மைகளை எடுத்துரைப்பேன் என்றும் கூறி இருந்தது குறிப்பிடத் தக்கது.
ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என திமுக தலைமை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பது குறித்து பதில் அளித்துள்ள அழகிரி, குற்றம் செய்தவர்களே கூடுதல் பாதுகாப்பு கோருவார்கள் என்றார்.
எனினும் தேமுதிகவுடன் கூட்டுச் சேரப் போவதில்லை என மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தெரிவித்துள்ளார்.

0 Responses to மு.க.அழகிரியின் பிறந்த நாள் கொண்டாட்டம் : 3 திமுக எம்.பிக்கள் வாழ்த்தியதால் பரபரப்பு