இலங்கை தமிழர்களாகிய நாம் அன்பு, பண்பு, பாசம் இவை அனைத்தையும் பேணிப்பாதுகாப்பவர்கள். தமிழர் என்றால் அது இலங்கையில் வாழும் தன்மானமும்
தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு இனம் என்று தான் உலகத்தில் பேசப்பட்டது. இப்படி
வாழ்ந்த எம்மை சிங்கள இனமும் சிங்கள இனவெறி அரசும் வேட்டையாட முற்பட்டது.
இதை அகிம்சை வழியில் தட்டிக் கேட்ட தமிழ்த் தலைவர்களை காலால் உதைத்து கடலில்
போட்டார்கள். இவற்றை எல்லாம் அனுபவித்த தந்தை செல்வா அவர்கள் தமிழினத்தை
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். கதைகளிலே கூட கண்டும் கேட்டும்
இருக்காத கடவுளாக கண் முன்னே தோன்றினார் நம் தலைவர்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அகிம்சை வழியில் அடைய முடியாது என்றுணர்ந்த தேசிய
தலைவர் அவர்கள் ஆயுத வழியில் பேராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். மாணவர்;,
ஆசிரியர், அதிபர் எல்லாமே அவராகி உலக சரித்திரத்தையே மாற்றினார். அன்று கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்ற தமிழன் ராடர் இல்லாது விமானம் ஓட்டி
காண்பித்தான் இன்று.
தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகவே போராடினோம், எமது நிலத்தை நாமே
ஆழவேண்டும், எமது மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக தம் உயிரையே
கொடுத்து போராடினார்கள். எமது இன விடுதலைப் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைகின்ற
வேளையில் மதவெறியர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உலகிற்கே புத்தி புகட்டும்
வளர்முக நாடுகளால் போராட்ட வடிவங்களை வரையறை செய்ய முடியவில்லை
இதனால் எமது போராட்டத்திற்கும் பயங்கரவாதப் பட்டம் சூட்டப்பட்டது. நாம் பயங்கரவாதிகள் அல்லர் என நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
இதனால் காலத்தின் தேவை கருதி புலம் பெயர் தமிழர்களாகிய நாம் தமிழீழ விடுதலையை
வென்றெடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டோம். ஆகவே திரும்பவும் எமது
நிலையை நிரூபிக்க வேண்டும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நினைவு படுத்த வேண்டிய
தேவை உள்ளது. ஆகவே தான் மீள் வாக்குப்பதிவு செய்து தமிழரின் தாகமே தமிழீழ தாயகம் என்பதை வலியுறுத்த புலம் பெயர் தமிழரின் இணர்டாவது தலைமுறை முயற்சிக்கிறது. இங்கு பிறந்து இங்கு வாழவேண்டியவர்கள் தமது அடையாளம் அழிந்து விடக்கூடாது என்று போராடுகிறார்கள். அங்கு பிறந்து இங்கு இடம்பெயர்ந்தவர்கள் சிலர் சுகபோகங்களை தேடி அலைகிறார்கள். தாயினும் மேலான தாய் நாட்டை மறந்து வாழ்கிறார்கள். அவர்களிற்க்கும் எம் பிள்ளைத் தமிழில் எம் தேவையை புரிய வைத்து தைமாதத்தில் வருகின்ற 23, 24ந் திகதிகளில் நடைபெறுகின்ற கருத்துக் கணிப்பில் பங்கு பெற வைப்போம்
அன்றும் இன்றும் என்றும் தமிழீழமே எங்கள் மூச்சு என உலகிற்கு
உணர்த்துவோம் வாரீர்;....
இப்படிக்கு
Peace Activities
Switzerland
Tel: 0041 79 394 94 34
Email: info@tpas.ch
Web: www.tpas.ch



0 Responses to தமிழரின் தாகம் தணியும் நேரம்