இந்த வசனத்தை கேட்கும் போதே உங்கள் சிந்தனைகள் எங்கு போகும் என்பது யாவரும்
அறிந்ததே! அந்த மாபெரும் தலைவன் தனது 35 வருட காலப் போராட்டப்பாதையில் தமிழீழம்
ஒன்றே எமது இனத்திற்கு அமைதியான, சுபீட்சமான, நின்மதியான வாழ்வை தரும் என்ற அசையாத நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இற்றை வரை போராடிhனார். 1977ம் ஆண்டில் தமிழீழ மக்கள் தமிழ் தலைவர்களிற்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்காகவே அவர் இற்றைவரை போராடினார். தலைவர் வே.பிரபாகரன் முன்னெடுத்த போராட்டம் தமிழீழ மக்களின் ஆணையின்பாற்பட்டதாகும். அதை இன்று புலம்பெயர் மக்கள் புதியபாதையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய காலக்கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதை நாம் உணர வேண்டும்.
அன்றைய வட்டுக் கோட்டைத் தீர்மானத்தில் எழுதப்பட்ட கோரிக்கைகளையும் எமது தலைவரின் அர்ப்பணிப்பையும் சேர்த்து பலர் இன்று கேள்விக் குறியாக்கி நிற்கும் நிலையில் அன்று தமிழீழ மக்கள் கொடுத்த ஆணையை எமது தலைவர் எவ்வாறு காத்து இன்றுவரை அதற்காக போராடினாரோ அதைவிட மூச்சோடும் வீறாப்போடும் வட்டுக் கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தான் எமது மக்களின் சுதந்திர தாகத்தை அடைய முடியும் என்பதை பலமடங்கு ஆழமாக அடித்து சொல்லும் காலப்பணி புலம்பெயர் மக்களாகிய எம்மிடம் விடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு இன்று புலம்பெயர் அமைப்புக்களும் இளையோர்களும் முழுமூச்சுடன் செயல்பட இறங்கி இருப்பது எஸ். ஓ. எஸ் அமைப்பினராகிய எம்மை மேலும் உச்சாகப்படுத்தியுள்ளது. சுவிஸ்வாழ் தமிழீழ மக்கள் அனைவரும் ஒற்றுமையாக எமது மக்களின் சுதந்திரமான, தலையீடற்ற அமைதியான வாழ்விற்கு தங்களின் ஆம் என்ற வாக்களிப்பின் மூலம் இந்த உலக நாடுகளுக்கும் இலங்கை அரசிற்கும் என்னதான் வதைபடினும் எமது இலக்கு சுதந்திர தமிழீழமே என்பதை ஐனநாயக வழியில் எடுத்துரைப்போம்.
இதனூடாக தமிழீழம் என்பது வெறும் விடுதலைப் புலிகளின் கோரிக்கையே என்றும் தமிழர்கள்
ஒற்றை ஆட்சியில் வாழவே விரும்புகின்றனர் மற்றும் 13வது திருத்த சட்டம் போதும் என பலவித மாஜா ஜால வித்தைகள் விடும் இலங்கை அரசிற்கும் உலகிற்கும் நல்ல பதிலடியை வழங்குவோம்.
ஆகவே மக்களே, இரத்தமின்றி வியர்வையின்றி உங்கள் காலக்கடன் செய்ய வாருங்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றாற் போல் இத் தைத் திருநாளில் வரும் 23ம் 24ம் திகதிகளில் சில மணி நேரத்தை ஒதுக்கி வாக்குச் சாவடியில் எழுதுங்கள் உங்கள் எதிர்காலத்தை! புலம்பெயர் போராட்ட களத்தில் நாம் புதிய பரிணாமம் பெறுவதை புரியுங்கள். தயவு செய்து உங்கள் பங்களிப்பை வாக்குச் சாவடியில் காட்டுங்கள்!
நன்றி
இனிமேலும் ஓயோம் இது உறுதி!
இப்படிக்கு
SOS For Tamils
Postfach 2374
8401 Winterthur
Switzerland
Email: sosfortamils@gmail.com



0 Responses to தமிழர் கனவு நனவாகும் காலமிது! (இனிமேலும் ஓயோம் இது உறுதி!) SOS For Tamils