
இவர்கள் அனைவரின் தியாக உணர்வு தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் பூராவும் கொழுந்துவிட்டு எரிந்தது. உன்னதமான உயிர்த்தியாகம் செய்துள்ள இவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அன்னாளில் தமிழகமெங்கும் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கும்படி உணர்வுள்ள தமிழர்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன். இதன் மூலம் நாமும் புத்துணர்வு பெறுவோம். இலங்கையில் முகாம்களில் சொல்லொண்ணா துன்பங்களுக்கு இடையே வாழும் தமிழர்களுக்கு விடிவு பிறக்க வழிகாணுவோம்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும் அமைப்புகளும் தமிழுணர்வாளர்களும் ஜனவரி 29ஆம் நாள் அன்று முத்துக்குமார் மற்றும் தோழர்களின் நினைவு நாளை கடைப்பிடிக்கும் வகையில் ஊர்வலங்கள் கூட்டங்கள் முதலியவற்றை நடத்தும்படி வேண்டிக்கொள்கிறேன்.
சென்னையில் முத்துக்குமார் வாழ்ந்த கொளத்தூரில் 29ஆம்தேதி மாலை நடைபெறவிருக்கும் வீரவணக்க நாள் கூட்டத்தில் மரு. இராமதாசு, வைகோ, தா.பாண்டியன் மற்றும் பழ. நெடுமாறன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்ளும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
0 Responses to முத்துக்குமார் வீரவணக்க நாள் கொண்டாடுக பழ.நெடுமாறன் வேண்டுகோள்