
பொன்சேகாவாக இருந்தாலும் சரி, ராஜபக்சவாக இருந்தாலும் சரி, யாராலும் நமக்கு எந்த நன்மையும் இல்லை. பின்னர் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று இவர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
இது குறித்து திருகோணமலையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கூறுகையில்:
எங்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் ராஜபக்சவாலும் முடியாது, பொன்சேகாவாலும் முடியாது. அவர்கள் எதுவும் செய்யவும் மாட்டார்கள். தேர்தலுக்காக இப்போது எதை வேண்டுமானாலும் அவர்கள் பேசுவார்கள்.
எனவே இவர்களுக்கு வாக்களிப்பதால் எங்களுக்கு வசந்தமும் வந்து விடாது. இவர்களுக்கு வாக்களிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. வாக்களிக்காமல் இருப்பதே சிறந்தது என்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.
0 Responses to பொன்சேகாவாக இருந்தாலும் சரி, ராஜபக்சவாக இருந்தாலும் சரி, யாராலும் நமக்கு எந்த நன்மையும் இல்லை: கிழக்கு மக்கள்