Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறுவதற்கு சிறிலங்கா அரசதலைவர் மகிந்த உதவினார் என்று மகிந்தவின் செயலர் லலித் வீரதுங்க வெளியிட்ட கருத்து தொடர்பில் மேலதிக தகவல்களை எதிர்பார்த்து தாம் காத்திருப்பதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் அமைப்பாளர் நளின் கோகில் தெரிவிக்கையில் -

ஓரு நாட்டின் தேர்தல் முடிவை இன்னொரு நாடு தீர்மானித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் மிக மிக அதிசயமான ஒன்று. இந்த தகவலின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படுமாயின் அது அதிசயமானதும் பொருத்தமற்றதாகவும் காணப்படும்.

இப்போதைக்கு, இது தொடர்பாக மேலதிக தகவல்களையும் அதன் உண்மைத்தன்மையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் - என்று கூறினார்.

0 Responses to காங்கிரஸின் வெற்றியை மகிந்த தீர்மானித்தார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com