தமிழீழ தேசிய தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிவணக்க நிகழ்வுகள் தீருவில் நினைவுத்தூபிக்கு அண்மையில் நடைபெற்றது. கடுமையான மழைக்கு மத்தியிலும் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், விடுதலை சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் உட்பட பல தமிழக ஆதரவாளர்களும் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்குகொண்டனர்.சிறிலங்கா புலனாய்வு துறையினர் கண்காணிப்பார்கள் என்ற அச்சத்தின் மத்தியிலும் குடாநாட்டு பொதுமக்கள் தமது இறுதி வணக்கம் செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
லெப் கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிருவனினதும் கேணல் கிட்டு ஆகியோரினதும் நினைவுத் தூபிக்கு அண்மையில் இறுதி வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று அங்கிருந்து பூதவுடல் ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.






0 Responses to திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதி வணக்க நிகழ்வுகள்: திருமாவளவன் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு (காணொளி, படங்கள் இணைப்பு)