Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகேஸ்வரனின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவாக மணிமண்டபம் ஒன்று நல்லூரில் திறந்துவைக்கப்படவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோயில் வடக்கு வீதியில் அமைக் கப்பட்டுள்ள மகேஸ்வரன் மணிமண்டபம் இன்று முற்பகலில் திறந்த வைக்கப்படவுள்ளது. இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இத்திறப்புவிழாவில் கலந்துகொள்ளலாம் என கருதப்படுகின்றது.

இத்திறப்பு விழா நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் முதல்வர் கரு ஜயசூரிய கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார். சரத் பொன்சேகாவுக்கு இவ்விழாவில் கலந்துகொள்வதற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மகிந்த இன்று நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். வழிபாட்டுக்கு செல்லும் மகிந்த விழாவுக்கு அதனையே சாட்டாகவைத்து கலந்துகொள்ளகூடும்.

ஏற்கனவே மகேஸ்வரனின் கொலையில் மகிந்தவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சவும் டக்ளஸ் தேவானந்தாவும் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் மகிந்த இந்நிகழ்வில் கலந்துகொள்ளாமல் விட்டால் தமது அரசு மீதான குற்றசாட்டு உறுதியாகிவிடும் என எதிர்பார்ப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் யாழ் வரும் மகிந்த ராஜபக்ச இந்நிகழ்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Responses to மகேஸ்வரனை கொன்றவர்கள் இன்று மணிமண்டபம் திறக்க யாழ் வருகை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com