Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் தொடர்பில் யதார்த்தபூர்வமாக செயற்படவுள்ளதாக அந்நாட்டு அரசின் குடிவரவை கண்காணிக்கும் முக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்ரோபர் 17 ஆம் திகதி 76 அகதிகளுடன் கனடா நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பல் அந்நாட்டு அரசால் தடுத்துவைக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தனர்.

தடுத்துவைக்கப்பட்ட 76 அகதிகளில் 51 தமிழ் அகதிகள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்தனர். ஏனைய 25 அகதிகளும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருக்கலாம் என கருதப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

கனடாவின் எல்லைச் சேவைகளுக்கான முகவர்கள் குறித்த 25 அகதிகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவந்திருந்தனர். ஆனால் கடந்த வியாழக்கிழமை அவ்வமைப்பு வெளியிட்ட தகவலில், குறித்த 25 அகதிகளின் விடுதலை தொடர்பில் தாம் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கமாட்டோமென தெரிவித்துள்ளனர்.

கனடாவின் குடிவரவு சட்டங்களின் அடிப்படையில் "பகுதி 86" என்ற சரத்தின் கீழ்தான் இவர்கள் மீதான விசாரணைகள் நடைபெற்றுவந்தன. ஆனால் அரச தரப்பால் உரிய சாட்சிகளை காண்பிக்கமுடியாத நிலையிலேயே அவர்கள் அனைவர் மீதான குறித்த விசாரணைகளை நிறுத்திக் கொள்வதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

எனவே ஏனைய 25 தமிழ் அகதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும், தமிழ் அகதிகள் தொடர்பில் கனடாவின் யதார்த்தபூர்வமான அணுகுமுறை வரவேற்கப்படவேண்டியது எனவும் தமிழ் அகதிகள் சார்பில் வாதாடிய சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குறித்த 25 அகதிகளும் எதிர்வரும் வாரங்களில் விடுவிக்கப்படுவர் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிறிலங்காவின் வெளியுறவுக்கான ஆலோசகர், குறிப்பிட்ட அகதிகளில் பெருமளவில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to கனடாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவர்: கனடா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com