மெல்பேண் ஸ்கோர்ஸ்பி சென் ஜூட் மண்டபத்தில், மாலை 7.15 மணிக்கு, அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் அவர்களின் கவிதையும், திருச்சி வேலுச்சாமி அவர்களின் உரையும் அகலத்திரையில் காண்பிக்கப்பட்டன. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவான கவிதையை தயாநிதி வாசித்தார்.
இந்நிகழ்வின்போது வானலையூடாக தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் அவர்களும் உரையாற்றினார். அவர் தனது உரையில், தமிழீழ தேசிய தலைவரின் விடுதலை வேட்கையை உருவாக்கிய பெருமை, திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களையே சாரும் என குறிப்பிட்டார்.
எப்போதுமே தமிழீழ தேசிய தலைவரின் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டுவந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள், பிரபாகரன் அவர்களை பற்றிய புத்தகம் ஒன்றை தான் எழுதியபோது அதனை சரிபார்த்து தந்தவரும் அவரேயென்றும் பழ. நெடுமாறன் அவர்கள் தனதுரையில் மேலும் குறிப்பிட்டார்.
உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வு, மாலை 8.15 மணியளவில் நிறைவுபெற்றது.
0 Responses to திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு: மெல்பேண் (படங்கள் இணைப்பு)