இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரச தலைவருக்கான தேர்தலில் தற்போதைய அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தோல்வியை தழுவினால் தென்னிலங்கையில் மிகப்பெரும் வன்முறைகள் வெடிக்கலாம் என அவுஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
இன்று சிறீலங்கா மக்கள் தமது ஆறாவது அரச தலைவரை தேர்ந்தெடுக்கப்போகின்றனர். இந்த தேர்தலானது தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னராக மகிந்தாவால் நடத்தப்படுகின்றது.
விடுதலைப்புலிகளை முறியடித்ததால் தென்னிலங்கையில் மகிந்தாவுக்கு கிடைத்த பெரும் ஆதரவுகளை முன்நிறுத்தி தேர்தலில் பெரும் வெற்றியீட்டலாம் என்ற நம்பிக்கையுடன்தான் மகிந்த இந்த அழைப்பை விடுத்திருந்தார். இருந்தபோதும் அவரின் கணிப்புக்கள் தவறாகி போய்விட்டது.
மகிந்தா கடுமையான போட்டிக்குள் சிக்கியுள்ளார். போரை வழிநடத்திய ஜெனரல் பொன்சேகா மகிந்தாவுக்கு கடும் போட்டியாளராக மாற்றமடைந்துள்ளார். தேர்தலில் எதிர்நோக்கப்பட்ட கடும் போட்டியை தொடர்ந்தே தேர்தல் வன்முறைகள் பெருமளவில் அதிகரித்தன.
எனினும் தற்போதைய தேர்தலில் மகிந்தா தோல்வியடைந்தால் தென்னிலங்கையில் மிகப்பெரும் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.



0 Responses to தேர்தலில் மகிந்த தோல்வியுற்றால் மிகப்பெரும் வன்முறைகள் வெடிக்கலாம்: அவுஸ்திரேலிய வானொலி