பதிந்தவர்:
தம்பியன்
09 January 2010
திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் தற்போது வல்வை தீருவில் மைதானத்தில் உணர்வுடன் அனுட்டிக்கப்பட ஏற்பாடாகியுள்ளது.
குமரப்பா புலேந்திரனுக்கு தீ மூட்டியபோது தீருவில் மைதானம் வந்த பிரபாகரன் மறுபடியும் தீருவில் மைதானம் வருவாரா என்ற பீதி இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் நடமாடும் இலங்கை இராணுவத்தினர் மத்தியில் பிரபாகரன் குறித்த வயிற்றுக்கலக்கம் ஆரம்பமாகியுள்ளது.
வீதியில் வருவோர் போவோரிடம் பிரபாகரன் பற்றி இராணுவம் கெடிக்கலக்கத்துடன் விசாரித்து வருவதாக யாழில் இருந்து பலர் கூறுகிறார்கள்.
வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரன் எங்கே பதுங்கி இருக்கிறார்,
அவர் இறுதிக்கிரியைக்கு வருவாரா என்று இராணுவத்தினர் பலரிடம் விசாரித்துள்ளனர்.
தமிழ் திரைப்படங்களில் இறுதிக்கிரியைக்கு மகன் வருவதுபோல ஒரு காட்சி இராணுவத்தினர் மனதில் உருவாகி அலைக்கழித்து வருவது தெரிகிறது.
நாளை இறுதிக்கிரியைவரை இராணுவம் கண்விழித்திருக்கப்போவது தெரிகிறது.
நன்றி: அலைகள்
0 Responses to இறுதிக்கிரியைகளில் பிரபாகரன் இராணுவம் கெடிக்கலக்கம்!