Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழினத்தை மீட்க அண்ணாவின் தம்பிகளாக தொடர்ந்தும் உழைப்போம் என்று வைகோ தெரிவித்துள்ளார். உழவர் திருநாளாம் தைத்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

கரும்பும் சக்கரைப்பொங்கலும் தமிழர் திருநாளில் நாவுக்கு சுவைதரும் எனினும் நம் இதயத்தில் இனிப்பு இல்லை உப்புக்கரிக்கிறது, நெஞ்சில் வடித்த கண்ணீரால், கடந்த ஆண்டு நம் தமிழினம் ஈழத்தில் கொலைக்களத்தில் வதைக்கப்பட்டது. சிங்களக் கொடியோர் நடத்திய கோரக்ககொலைக்கும் நம் தொப்புள்கொடி உறவுகள் பலியான பெருந்துயர் நேர்ந்தது.

அடிமைத்தளை இடப்பட்டவராய் தங்கள் தாயக மண்ணில் முள்வேலி முகாம்களில் மட்டும் இன்றி தங்கள் உரிமை மண்ணிலும் துன்பத்தில் துடிக்கிறார்கள். அவர்கள் வேதனை நீங்கி வாழ்வு பூத்து சுதந்திர தமிழீழம் மலர்ந்தால்தான் பொங்கல் திருநாள் தமிழினத்திற்கு மகிழ்ச்சி. பொங்கல் திருநாளாக முடியும் அந்தநிலை ஏற்பட் தமிழர் அனைவரும் உறுதிகொள்வோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் வீரம்செறிந்த போரும் மகத்தான தியாகமும் ஒருபோதும் வீண்போகாது. தமிழீழ விடுதலைப்போரினை புதிய வடிவத்தில் மாவீரன் பிரபாகரன் முன்னெடுத்துசெல்வார். தனித்தமிழீழ இலக்கினை அடையும். தமிழ்ஈழம் மலர ஈழவிடுதலைப் போரில் மாவீரர்கள் சிந்திய குருதியின் மீது ஆணை, அவர்தம் கல்லறைமீது ஆணை, தியாக சிகரமாய் முத்துக்குமார் உள்ளிட்ட செந்தணல் தழுவிய உத்தமர்களின் தியாகத்தின் மீது ஆணை ஏற்போம்.

இறையாண்மையுள்ள சுதந்திர தமிழீழ தேசம்தான் ஒரே தீர்வு என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை பிரகடனமே நாம் சென்று அடையவேண்டிய ஒரே இலக்காகும். தமிழர்களின் நெடிய வரலாற்றில் நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப்போன்ற அழிவும், இழிவும், என்நாளும் விளைந்ததில்லை. எனவேதான் வெறுமென வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதைவிட தமிழர் நாகரீகத்தின் அடையாளத் திருநாளில் உண்மைநிலை உணர்ந்து அழிவில் இருந்து மீளவும் ஏற்பட்ட இழிவினை போக்கவும் மான உணர்வுடன் நெஞ்சில் வஞ்சினம் கொள்ளுவது நம்தலையாயகடமை.

தமிழர்கள் போற்றிவந்த பண்பாடும் நெறிகளும் சின்னாபின்னமாகிவரும் நிலையை எண்ணுகையில் நெஞ்சு பொறுக்குதில்லை. அனைத்து முனைகளிலும் அச்சுறுத்தும் அவலமும் இன்னமும் சூழ்ந்துள்ள போதிலும் இந்தத்திருநாளில் இருந்து தமிழகத்தை தமிழ் இனத்தை மீட்கவும், தரணியில் தமிழர்க்கோர் தேசம் தமிழ் ஈழதேசம் அமைக்கவும் அண்ணாவின் தம்பிகளாய் நாம்கடமை ஆற்றுவோம் அந்த உறுதியை பொங்கல் நன்னாளில் நம் மனதில் ஏற்றுவோம் என்று பொங்கல் வாழ்த்து செய்தியில் மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக்கழக செயலாளர் வைகோ தெரிவித்துள்ளர்.

நன்றி: சங்கதி

0 Responses to தமிழீழ விடுதலைப்போரினை புதியவடிவத்தில் பிரபாகரன் முன்னெடுத்துசெல்வார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com