வெளிநாட்டுக்கு தப்பியோடிய சிறிலங்காவின் பிரபல பாதாளஉலக கும்பல் தலைவனான குடு லாலை நாடு திரும்புமாறு அரச தலைவர் மகிந்த தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாதாள கும்பல் தலைவர்களுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்ட தேடியழிப்பு நடவடிக்கையின்போது, அமைச்சர் மேர்வின் சில்வாவின் நெருங்கிய நண்பரான குடு லால், மேர்வின் சில்வாவின் பாதுகாப்புடன் கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்நிலையில், தேர்தல் காலம் நெருங்கிவரும் சமயம் குடு லாலை மீண்டும் நாட்டுக்கு திரும்புமாறு அரசதலைவர் மகிந்த, மேர்வின் சில்வாவின் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளதாகவும் நாடு திரும்பினால் அவருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் என்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குடு லால் என்ற பாதாள உலககும்பல் தலைவன், சிறிலங்காவின் தலைநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல் என பல நூற்றுக்கணக்கான பாராதூரமான குற்றச்செயல்களை மேற்கொண்ட முக்கிய புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொழும்பு மருதானை பகுதியில் உள்ள பாதாள உலகக்கும்பல் தலைவர்கள் இருவர், பொன்சேகா தரப்பை சேர்ந்த அரசியல்வாதி ஒருவருடன் இரகசிய பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாக அரசு தரப்புக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்களை இருவரையும் படுகொலை செய்வதற்கு அதிரடிப்படையின் விசேட கொமாண்டோக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.



0 Responses to தப்பியோடிய "குடு லாலை" நாடு திரும்புமாறு மகிந்த தொலைபேசியில் அழைப்பு