Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் திசநாயகம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திசநாயகத்தின் மருத்துவ தேவைகளின் அடிப்படையில் அவரை கொழும்பு நீதிமன்றம் ஐம்பதினாயிரம் ரூபா காசுப்பிணையில் விடுவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி சிறிலங்கா பயங்கரவாதத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட திஸநாயகத்திற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இவர் நடத்திய நோர்த் ஈஸ்டர்ன் ஹெரால்ட் என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஆக்கங்கள் இன்னொரு சமூகத்திற்கு பயங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்தது என்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதியதன் மூலம் அந்த அமைப்புக்கு சார்பான சஞ்சிகையை வெளியிடுவதற்கு பணம் திரட்டியது பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயலே என்றும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இவருக்கு எதிரான தீர்ப்புக்கு அமெரிக்க அதரச அதிபர் ஒபாமா முதல் பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டனர். இந்நிலையில், சிறிலங்கா அரசதலைவர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் திஸநாயகத்துக்கு பிணை அனுமதி வழங்குவதற்கு அரச தரப்பு அனுமதித்தது. இன்றைய தினம் இடம்பெற்ற நீதிமன்ற அமர்வின்போது அது அறிவிக்கப்பட்டது.

0 Responses to ஊடகவியலாளர் திஸநாயகம் பிணையில் விடுதலை! தேர்தல் நாடகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com