தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்புக்குரிய திரு. திருவேங்கிடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு நேற்று (10.01.2010) அன்று மாலை 2.30 மணியளவில் Croydon Lanc France மண்டபத்தில் நடைபெற்றது.அகவணக்கத்தோடு ஆரம்பித்த இந்நிகழ்வில் ஈகச்சுடரினை அன்னாரின் பெறாமகன் திரு.அருணாச்சலம் இரட்ணசபாபதி அவர்கள், அன்னாரது பேத்தியார் சிந்துஜாவுடன் இணைந்து ஏற்றினார்.
மட்டுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ப .ஜெயானந்தமூர்த்தி அவர்கள் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்து இந்நிகழ்வில் கலந்தகொண்ட பெருந்திரளாண மக்கள் வரிசையாக நின்று மலர்வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் பல தமிழத்தேசிய உணர்வாளர்களின் உரைகளும் உணர்ச்சிக் கவிதைகளும் இடம்பெற்றன.
பிரித்தானியாவில் நிலவிய கடுமையான குளிரின் மத்தியிலும் பெருந்திரளான மக்கள் சிறுவர்களுடன் வந்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








0 Responses to பிரித்தானியாவில் வீரத்தந்தையின் வீர வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)