Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோடானுகோடி தமிழ்மக்களின் உள்ளங்களில் குடிகொண்ட எம் தலைவனின் தந்தை, திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு தமிழ் மக்களின் புண்பட்ட இதயங்களில் வேலாகப் பாய்ந்துள்ளது.

ஒளிதந்து கரைந்த மெழுகுவர்த்தியே சத்திய இலட்சியத்திற்காய் சரித்திரமானவரே தள்ளாத வயதினிலும் தியாகத் தீயினுள் நடந்தவரே ஆயுதமேந்தாத போராட்டமே வாழ்க்கையாகக் கொண்டவரே எங்கள் சுதந்திரப் பயணத்தின் சூத்திரரே உங்களுக்கு தமிழ் மக்களாகிய எங்கள் சிரம் தாழ்த்திய அகவணக்கம்.

மரணத்தினால் மனிதர்கள் மறையலாம் அவர்கள் மாண்புகள் மறைவதில்லை. காலப்பெருவெள்த்தில் கரைந்திடாத மாமனிதனே உங்கள் இறப்பினுள் வாழ்வும் இழப்பினில் காப்பும் கருக்கொள்ளும்.

விடுதலைப் போராட்டச் சுடர்விளக்கின் தூண்டுகோலே உமைவதைத்த சிங்களத்தை தமிழினம் ஒரபோதும் மன்னிக்காது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அது மறுபடியும் வெல்லும்.

ஈழம்வெல்லும் அதை காலம் சொல்லும்.

உமது பிரிவால் துயருறும், துணைவி, பிள்ளைகள், மருமக்கள், மற்றும் உலகத் தமிழினத்திற்கும் யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம், தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றது.

யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்

யேர்மனி.

0 Responses to யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இரங்கல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com